For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எப்படி இப்படி நினைக்கிறார் விஜயகாந்த்?.. அதிருப்தி சுந்தரராஜன் கேள்வி

Google Oneindia Tamil News

Rebel MLA questions Vijayakanth
மதுரை: டெல்லியில் மோடியையும், ராகுலையும் விமர்சித்த விஜயகாந்த் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அந்த கட்சிகளுடன் கூட்டணிக்குப் பேசி வருகிறார். சீட் பேரம் நடக்கிறது. டெல்லியில் உள்ள தமிழர்களை காப்பாற்றாத பாரதிய ஜனதாவும், காங்கிரஸ் கட்சியும் தமிழகத்தில் உள்ள ஏழரை கோடி தமிழ் மக்களை எப்படி காப்பாற்றும் என்று விஜயகாந்த் நினைக்கிறார் என்று தெரியவில்லை என்று கேட்டுள்ளார் அதிருப்தி தேமுதிக எம்.எ்.ஏ. சுந்தரராஜன் கேட்டுள்ளார்.

இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

தேமுதிக. பொதுக் குழுவில் விஜயகாந்த் டாஸ்மாக்குக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது மக்களிடையே நகைப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக மக்களுக்காக இதுவரை எதுவும் செய்யாத விஜயகாந்த் கடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் வேட்பாளர்களை அறிவித்து போட்டியிட்டார். டெல்லியில் உள்ள 15 லட்சம் தமிழர்களை காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதாவும் புறக்கணிப்பதாக பிரசாரம் செய்தார். ஆனாலும் டெல்லி மக்கள் தே.மு.தி.க. வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போடவில்லை.

டெல்லியில் மோடியையும், ராகுலையும் விமர்சித்த விஜயகாந்த் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அந்த கட்சிகளுடன் கூட்டணி பேசி வருகிறார். சீட் பேரம் நடக்கிறது. டெல்லியில் உள்ள தமிழர்களை காப்பாற்றாத பாரதிய ஜனதாவும், காங்கிரஸ் கட்சியும் தமிழகத்தில் உள்ள ஏழரை கோடி தமிழ் மக்களை எப்படி காப்பாற்றும் என்று விஜயகாந்த் நினைக்கிறார் என்று தெரியவில்லை.

மக்களையும், தொண்டர்களையும் ஏமாற்றுவதற்காக விஜயகாந்த் தற்போது கூட்டணி நாடகம் ஆடுகிறார். அது தமிழக மக்களிடம் எடுபடாது. தே.மு.தி.க.வுக்கு முதல்-அமைச்சர் கூறியது போல இனி தேய்முகம் தான். எதிர்காலம் இல்லை. எனவே தேமுதிக தொண்டர்கள் தங்களது எதிர்காலத்தை சிறப்பாக்கி கொள்ள சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் என்றார் அவர்.

English summary
Rebel DMDK mla Sundararajan has asked Vijayakanth, how he believes Congress and BJP will save Tamil Nadu people?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X