மாட்டுக்கறி தடைக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: மத்திய அரசு கொண்டு வந்த பசுவதை தடுப்பு சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

மத்திய அரசு பசுக்களை இறைச்சிக்காக விற்கவோ வாங்கவோ கூடாது என பசுவதைச் சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து கேரளா, கர்நாடகா, மேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். கேரளாவில் மாட்டுக்கறி திருவிழாவை பல அமைப்புகள் நடத்தின.

Resolution passed against cow's law told Puducherry CM Narayanasamy

இந்நிலையில், புதுச்சேரி அரசு சட்டசபயில் மாட்டுக்கறி தடைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் பசுவதை தடுப்பு சட்டத்துக்கு எதிராக அனைத்து சட்டசபை உறுப்பினர்களும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

அரசியல் அமைப்பு சட்டத்தின்படி ஒருவர் என்ன உணவு உண்ண வேண்டும், என்ன ஆடை உடுத்த வேண்டும் என்பதை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அந்த வகையில் மத்திய அரசு மாட்டுக்கறிக்கு எதிராக கொண்டு வந்த சட்டத்தை திருத்தம் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்துகிறோம் என கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Central government do not compel any one what to eat and not to eat. we passed a resolution against cow's law told Puducherry CM Narayanasamy.
Please Wait while comments are loading...