For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எம்ஜிஆர் அறக்கட்டளை சொத்துக்களை நிர்வகிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் நியமனம்: ஐகோர்ட் உத்தரவு

எம்.ஜி.ஆர் அறக்கட்டளை சொத்துக்களை நிர்வகிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமனை ஐகோர்ட் நியமித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் உள்ள கோடிக்கணக்கான சொத்துக்களை நிர்வகிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமனை சென்னை ஐகோர்ட் நியமித்து உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பெயரில் உள்ள அறக்கட்டளையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்களை யார் நிர்வகிப்பது என்பது குறித்து அவரது குடும்பத்தாரிடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதுதொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்டது.

Retired Judge appointed by HC as administrator of MGR Trust

அந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் விசாரித்தார். விசாரணையில் முடிவில் எம்.ஜி.ஆர் அறக்கட்டளையில் உள்ள கோடிக்கணக்கான சொத்துக்களை நிர்வகிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமனை நீதிபதி நியமித்து உத்தரவிட்டார்.

ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர். பெண்கள், தலித்துகள் தொடர்பான முக்கிய வழக்குகளில் மிக முக்கியமான தீர்ப்புகளை வழங்கியவர்.

English summary
Retired Judge Hariparanthaman was appointed as an administrator of MGR Trust by Chennai High Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X