• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆர்கே நகரில் ஒன்இந்தியாவின் நேரடி கள ஆய்வின் மூன்றாவது பகுதி இது...

|

முதலிரு பகுதிகள்:

சசிகலா பெயரைச் சொன்னாலே கொந்தளிக்கும் மக்கள்!- ஆர்கே நகர் களத்தில் ஒன் இந்தியா!

மதுவை ஓவர்டேக் செய்யும் மருது... தீபா ஒரு காமெடி... ஆர்கே நகர் களத்தில் ஒன் இந்தியா...!

வேகமெடுத்த ஸ்டாலின்

வேகமெடுத்த ஸ்டாலின்

புது வேட்பாளர், செல்வாக்கு கம்மி, செலவு செய்வாரா? என்று எழுப்பப்பட்ட பல கேள்விகளுக்கு தனது பிரசாரக் கூட்ட அதிரடி மூலம் பதிலளித்துவிட்டார் ஸ்டாலின். மற்ற கட்சிகள் கூட்டம் போடத் தயங்கியபோது கூட்டணித்தலைவர்களை ஒன்றிணைத்து கூட்டம் போட்டதோடு நல்ல கூட்டத்தையும் காட்டிவிட்டார்.

திமுகவில் ஆர்கே நகர் தொகுதி தேர்தலுக்கான பொறுப்பு பிகே.சேகர்பாபு மற்றும் மாதவரம் சுதர்சனம் ஆகிய இருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திமுக நிர்வாகிகள் செலவு செய்ய ரொம்பவே யோசிக்கிறார்களாம். கட்சியில் இருந்து பண சப்போர்ட் எதிர்பார்க்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். நிற்பதோ செலவு செய்ய முடியாத ஒரு நபர். தொகுதிக்குள் நல்ல பெயர் இருந்தாலும் கூட மதுசூதனனோடு போட்டி போடும்போது அது குறைவு தான். ஆனால் நல்லவர், கஷ்டப்பட்டு வந்தவர் என்ற இமேஜ் இருக்கிறது. அது ஒன்று தான் திமுக வேட்பாளரைக் காப்பாற்ற வேண்டும்.

திமுகவில் சுமார் 20 ஆண்டுகளாக திமுகவில் இருக்கும் செல்வம் என்பவர் ‘இந்த இடைதேர்தல் ஸ்டாலினுக்கான எடை தேர்தலா இருக்கும். இதுவரைக்கும் ஸ்டாலின் தலைமையில் திமுக சந்தித்த எல்லா தேர்தல்களிலுமே தோல்வி தான் கிடைச்சிருக்கு. இந்த செண்டிமெண்டை உடைப்பாரானு பார்க்கணும். முக்கியமா இந்த ஏரியால லேடீசை கவர்ந்தா தான் ஜெயிக்க முடியும். ஆனா ஸ்டாலின் கனிமொழியை பிரசாரத்துக்கு விட மாட்டார்னு செய்தி வருது. அப்படி ஒண்ணு நடந்தா அது கட்சிக்கு பின்னடைவாத்தான் இருக்கும்' என்கிறார்.

பாதி கரை ஏறிவிட்டார் தளபதி. ஆனால் மதுவை வெல்ல இன்னும் ஓட வேண்டும். திமுகவின் வெற்றி முழுக்க முழுக்க ஸ்டாலின் கைகளில் தான் இருக்கிறது. ஓபிஎஸ்சுக்கு டஃப் ஃபைட் கொடுத்தால் மட்டுமே இங்கே வெற்றிக்கனியை சுவைக்க முடியும்.

மது வெல்லுமா?

மது வெல்லுமா?

மதுசூதனனுக்கு தொகுதி முழுக்க நல்லப் பெயர் இருக்கிறது. எளிதில் அணுகக்கூடிய ஒரு நபர். கட்சி பாகுபாடு பார்க்காமல் உதவி செய்பவர். தொண்டர்களின் சுக துக்க நிகழ்ச்சிகளுக்கு தகுதி தராதரம் பார்க்காமல் வருபவர். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் மதுசூதனன் வந்தால் ஐயாயிரம் முதல் பத்தாயிரம் வரை மொய் வைத்துவிட்டு தான் செல்வாராம். பழைய ஆள் என்பது ப்ளஸ்.ஒவ்வொரு வார்டாக ஏறி இறங்கும் மதுசூதனன் தொண்டரின் வீட்டுக்கு உள்ளேயே உரிமையோடு சென்று ஓட்டு கேட்பது தொண்டர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

‘இப்போ இருக்கற அரசியல் தலைவர்கள்லேயே நம்பிக்கையானவரா தெரியறார் ஓபிஎஸ். இத்தனை நாளா நடுநிலையா இருந்த நானே ஓபிஎஸ் கைகாட்டுற ஆளுக்கு ஓட்டு போட தயாராகிட்டேன். எங்க ஏரியாவை சேர்ந்த எங்களுக்கு நல்ல பரிச்சயமான மதுசூதனனை நிக்க வெச்சது அதை உறுதியாக்கிடுச்சு' என்றார் சுபாஷ் என்ற ஏற்றுமதி வியாபாரி.

குப்புசாமி என்ற ஆட்டோ டிரைவர் ‘அம்மா எங்க ஏரியால நின்னதால தான் மெட்ரோ ட்ரெய்ன் கிடைச்சது. கல்லூரி வந்தது. அம்மா வழியில இப்போ செயல்படறது ஓபிஎஸ் தான். அவர் எந்த சின்னத்துல நின்னாலும் என் ஓட்டு அவருக்கு தான்' என்றார்.

'ஓபிஎஸ், மதுசூதனன் ரெண்டு பேருமே அம்மாவோட செலக்‌ஷன்ஸ். அவங்க முன்னாடி அம்மாவால விலக்கி வைக்கப்பட்ட தினகரன் பருப்பு வேகாது' என்று சிரிக்கிறார்கள் லட்சுமணன்-மதிவாணன் இரட்டையர்கள்.

ஸ்டாலின் கையில் எடுத்த பிறகே ஓபிஎஸ் ஜெயலலிதா மரண மர்மத்தைக் கையில் எடுத்தார். ஏன் தயங்குகிறார் என்று புரியாமல் விழிக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். ஆர்கே நகர் தொகுதி மக்களைத் தன் பக்கம் திருப்புவது ஓபிஎஸ்சின் கைகளில் தான் இருக்கிறது. இன்னும் அதிரடியை எதிர்பார்க்கிறார்கள் மக்கள். ஓபிஎஸ் வேகமெடுத்தால் தான் உண்டு.

திணறும் தினகரன்

திணறும் தினகரன்

டிடிவி தினகரன் நிற்கிறார் என்றதுமே தோல்வி உறுதியாகி விட்டது என்றார் அதிமுக விசுவாசி ஒருவர். ‘அம்மாவே நின்னு ஜெயிச்ச தொகுதி இது. அம்மாவை எங்க வீட்டு பொம்பளையா பார்த்து தான் ஓட்டு போட்டோம். எங்க தொகுதிக்கு நிறைய செய்வாங்கனு எதிர்பார்த்தோம். ஆனா சுத்திலும் இருக்கிறவங்க சதியாலதான் அம்மா இறந்தாங்க. இன்னிக்கும் எங்க ஏரியா பொம்பளைககிட்ட கேளுங்க. அம்மாவை கொன்னுட்டாங்கன்னு தான் சொல்வாங்க. அப்படி அம்மாவை கொன்னவங்க குடும்பத்தை சேர்ந்தவரே தேர்தல்ல நின்னா எப்படி ஓட்டு போடுவாங்க? தினகரன் பிரசாரத்துக்கு வரும்போதே கூட்டம் சேரலை பாருங்க,' என்றார்.

"அம்மா ஜெயிச்ச உடனேயே எங்க தொகுதி அப்படி ஆயிடும் இப்படி ஆயிடும்னு கனவு கண்டோம். அம்மாவும் ஸ்பெஷலா எங்க தொகுதியை கவனிக்க ஆரம்பிச்சாங்க. அதுவரைக்கும் அரசாங்க ஹாஸ்பிடல்னா ராயபுரம் தான் போகணும். அம்மா வந்து இங்கேயே ஒரு ஹாஸ்பிடல் கட்டினாங்க. அதை இன்னும் திறக்க கூட இல்லை. பூட்டியே கிடக்கு. இதுக்கெல்லாம் காரணம் சசிகலா குடும்பம் தான்னு எல்லாருக்கும் தெரியும். அப்புறம் எந்த மூஞ்சை வெச்சுகிட்டு தினகரன் ஓட்டு கேட்க வர்றாருனு தெரியலை' என்றார் கலைவாணி என்ற பெண்மணி.

டிடிவி தினகரன் நிற்பதை சில பெண்கள் பாசிட்டிவ்வாக பார்த்தார்கள். ‘வேற யாராவது நிறுத்தியிருந்தா கூட செலவு பண்ண தயங்குவாங்க... ஆனால் தினகரனே நிக்கிறதால எங்களுக்கு நிறைய பணம் கிடைக்கும். எல்லாம் எங்ககிட்ட அடிச்ச பணம்தானே... வாங்குற வரைக்கும் எங்களுக்கு லாபம். ஆனா ஓட்டு கண்டிப்பா தினகரனுக்கு கிடையாது. அவர் இரட்டை இலை சின்னத்துலேயே நின்னுருந்தாலும் சரி...," என்றார் இளமதி என்ற பெண்மணி.

தினகரனுக்கு கூட்டம் சேர்வதற்கான அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டன.

வெறும் பணம் மட்டுமே தினகரன் பக்கம் இருக்கிறது. அது காப்பாற்றுமா? கவிழ்க்குமா? என்றுதான் அவருக்கே புரியவில்லை.

தீபா காமெடி

தீபா காமெடி

தீபா பக்கம் சாயவிருந்த பெண்கள் கூட மதுசூதனின் அப்ரோச்சை பார்த்து மனம் மாறுகிறார்கள். 'தீபா இன்னும் குழப்பத்தில் இருந்தே மீளலை. அதுக்குள்ள அவங்க ஹஸ்பெண்ட் வேற தனியா காமெடி பண்றாரு. தீபாவோட பேச்சே சரியில்லை. அவங்களை நம்பி எப்படி ஓட்டு போடுறது? ஓபிஎஸ் தான். மத்த எல்லாருமே வேஸ்டு. தீபாவுக்கு ஓட்டும் போட்டுட்டு அவங்களுக்கு அரசியலும் சொல்லிக்கொடுக்கணுமா? இந்த முறை தோத்தா தான் அவங்க அரசியல்ல நீடிப்பாங்களா இல்லை காணா போய்டுவாங்களா?னு தெரியும். நீடிச்சா பார்க்கலாம்' என்கிறார் சித்ரா என்ற பெண்மணி.

தீபாவுக்கான ஆதரவு குறைந்துகொண்டே தான் வருகிறது. அதிகம் படிக்காத அடித்தட்டு பெண்கள் தீபா பெயரை சொல்கிறார்கள். அவர்களே யோசித்து தான் சொல்கிறார்கள் என்பதால் தடுமாறி தடம் மாற வாய்ப்புள்ளது. எனவே தீபா டெபாசிட் வாங்குவதே பெரும்பாடாக இருக்கும்.

முந்தைய வார கணிப்புகளோடு ஒப்பிட்டால் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் ஓபிஎஸ் அணியின் மதுசூதனனை சற்று முந்துகிறார். தீபாவுக்கு பெரிய பின்னடைவு தான் ஏற்பட்டிருக்கிறது. இந்த கிராஃப் அப்படியே நீடித்தால் மருதுகணேஷே வெல்ல வாய்ப்புகள் அதிகம். பட்டுவாடா தொடங்கி பிரசாரம் களைகட்டினால் மாற்றம் நிகழுமா எனப் பார்ப்போம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
3rd part of Oneindia's spot report from RK Nagar constituency.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more