ஆர்கே நகர் மக்களுக்கு பிடித்தமான சமூக அக்கறையுள்ள நடிகர் 'விஜய்'... சர்வே முடிவு!
சமூக அக்கறையுள்ள நடிகர்களில் விஜய்க்கு ஆர்கே நகர் தொகுதி மக்கள் அதிக வாக்குகள் அளித்துள்ளனர். பேராசிரியர் ராஜநாயகம் குழுவினரின் மக்கள் ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
சென்னை : ஆர்கே நகர் தேர்தல் குறித்து பேராசிரியர் ராஜநாயகம் மற்றும் அவரின் குழுவினர் இணைந்து நடத்திய மக்கள் ஆய்வு முடிவில் சமூக அக்கறையுள்ள நடிகர்கள் வரிசையில் விஜய் முதல் இடம் பிடித்துள்ளார்.
சென்னை ராதாகருஷ்ணன் நகர் இடைத் தேர்தலையொட்டி பேராசிரியர் ராஜநாயகம் மற்றும் அவரின் குழுவினர் இணைந்து தேர்தல் கள நிலவரம் குறித்த மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளனர். எந்த அரசியல் கட்சிக்கு மக்களின் ஆதரவு, மக்களிடத்தில் செல்வாக்கு பெற்ற வாக்காளர் யார் என்று கள ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
மக்கள் கள ஆய்வு சார்பாக நடத்தப்பட்ட சர்வே முடிவுகளை பேராசிரியர் ராஜநாயகம் இன்று வெளியிட்டுள்ளார். இதில் இன்றைய அரசியல் சூழலில் எந்த கட்சி வேட்பாளருக்கு மக்களின் ஆதரவு என்ற முடிவு அனைவருக்குமே ஆச்சரியத்தை அளிக்கும் வகையில் உள்ளது.
ஆளும் கட்சியான அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனனுக்கு இந்த கருத்துக்கணிப்பு முடிவில் மூன்றாவது இடம் தான் கிடைத்துள்ளது. எதிர்க்கட்சியான திமுக வேட்பாளர் மருதுகணேஷிற்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. எந்த கட்சியும் சாராமல் தனித்து போட்டியிடும் தினகரனுக்குத் தான் மக்களின் அதிக ஆதரவு இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்கின்றன.

அரசியல் நட்சத்திரங்கள்
தமிழக அரசியல் களத்தில் அண்மைக்காலமாக கிளப்பப்படும் பரபரப்பு நடிகர்களின் அரசியல் பிரவேசம். 20 ஆண்டுகளுக்கும் மேல் அரசியலுக்கு வருவதை சஸ்பென்ஸாகவே வைத்திருக்கும் நடிகர் ரஜினி, விரைவில் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்த நடிகர் கமல் என ஸ்டார்களின் அரசியல் வரவு எப்போது என்பது தொடர் பரபரப்பாக இருந்து வருகிறது.

விஜய்க்கு வந்த மெர்சல் பிரச்னை
இதற்கிடையில் திடீரென சுயேச்சை வேட்பாளராக இடைத்தேர்தல் களத்தில் குதித்து விஷால் ஒரு பக்கம் அரசியல் பொறி பறக்க விட்டார். மெர்சல் பட விவகாரத்தில் பாஜக கொடுத்த குடைச்சலின் போதே நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்கிற தொணியில் பேசி வந்தார் அவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்.

எந்த நடிகருக்கு ஆதரவு
இந்நிலையில் ஆர்கே நகர் மக்களிடம் சமூக அக்கறையுள்ள நடிகர் யார் என்று கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில் தனக்கு பிடித்த சமூக அக்கறையுள்ள நடிகர்கள் யார் என்று நடிகர் விஜய், விஷால், ரஜினி, கமல், அஜித் என்று மக்களிடம் வாக்கு கேட்கப்பட்டுள்ளது.

விஜய் சமூக அக்கறையுள்ளவர்
இதில் நடிகர் விஜய்க்கு சமூக அக்கறையுள்ளதாக 18.7 சதவீதம் மக்கள் வாக்களித்துள்ளனர். விஜய்க்கு அடுத்தபடியாக விஷால் 14.2 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் நடிகர் ரஜினிக்கு இந்த வரிசையில் மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. ரஜினிக்கு சமூக அக்கறை இருக்கிறது என்று 9.8 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

கமலுக்கு 8.5% பேர் மட்டுமே ஆதரவு
இதே போன்று நடிகர் கமலுக்கு எந்த அளவிற்கு சமூக அக்கறை இருக்கிறது என்று கேட்டதற்கு அவருக்கு ஆதரவாக 8.5 சதவீதம் மக்கள் வாக்களித்துள்ளனர். நடிகர் அஜித்திற்கு இந்த வரிசையில் கடைசி இடம் தான் கிடைத்துள்ளது. அவருக்கு ஆதரவாக 6.3 சதவீதம் மக்கள் வாக்களித்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications