For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘இளந்தாமரை மாநாடு’: மோடி பேச்சைக் கேட்க திருச்சியில் குவிந்த பாஜகவினர்

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சியில் இன்று நடைபெற்ற இளம் தாமரை மாநாட்டையொட்டி அங்கு தொண்டர்கள் குவிந்து விட்டனர்.

நரேந்திர மோடியின் பேச்சைக் கேட்க பெருமளவிலான பாஜகவினர் திருச்சியில் குவிந்ததால் நகரமே திணறிப் போனது.

திராவிடக் கட்சிகளுக்கு எப்போதும் ராசியான நகரம் என்பதால் பாஜகவினர் இன்றைய கூட்டம் மற்றும் மோடியின் பேச்சு தங்களது கட்சிக்கு தமிழகத்தில் வருகிற லோக்சபா தேர்தலில் புதிய ஊக்கத்தை அளிக்கும் என்று நம்பிக்கையுடன் திரண்டிருந்தனர்.

தமிழகத்தில் முதல் கூட்டம்....

தமிழகத்தில் முதல் கூட்டம்....

நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் தமிழகத்தில் கலந்து கொள்ளும் முதல் கூட்டம் என்பதால் பாஜகவினர் பெரும் எதிர்பார்ப்புடனும் காத்துள்ளனர்.

பேனர்கள், பிளக்ஸ்....

பேனர்கள், பிளக்ஸ்....

திருச்சி நகர் முழுவதும் மோடி படத்தை பெரிய பெரிய சைஸ்களில் போட்டு பிரமாண்ட பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் என பாஜகவினர் வைத்துள்ளனர்.

காவிக்கு மாறிய திருச்சி....

காவிக்கு மாறிய திருச்சி....

பாஜகவினரின் கொடிகளால் திருச்சி நகரமே காவி மயமாக காணப்படுகிறது.

இளைஞர் கூட்டம்...

இளைஞர் கூட்டம்...

இளைஞர்களைக் குறி வைக்கும் வகையிலான மாநாடுஇது என்பதால் இளைஞர் கூட்டத்தை பெருமளவில் திரட்டிக் கொண்டு வர பாஜகவுடன் முனைப்புடன் கடைசி நிமிடம்வரை செயல்படுவதை பார்க்க முடிந்தது.

நம்பிக்கை...

நம்பிக்கை...

இதுவரை தமிழகத்தில் பாஜக என்றால் அது கன்னியாகுமரி, கோவை மாவட்டங்கள் என்ற அளவில்தான் இருக்கிறது. ஆனால் இந்த மாநாட்டுக்குப் பிறகு தமிழகம் முழுவதும் கட்சி பலப்படும் என்று பாஜகவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

வலுக்கும் எதிர்ப்பு....

வலுக்கும் எதிர்ப்பு....

ஆனால் நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை அறிவித்துள்ளதால் திருச்சியில் பதட்டமும் நிலவுகிறது. இதனால் பாதுகாப்பும் கடுமையாக பலப்படுத்தப்பட்டுள்ளது.

மோடி பேச்சு

மோடி பேச்சு

இன்றைய இளம் தாமரைக் கூட்டத்தில் நரேந்திர மோடி என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தமிழக மீனவர் பிரச்சினை குறித்து அவர் முக்கியமாகப் பேசினார்.

கூட்டணிப் பேச்சு இல்லை

கூட்டணிப் பேச்சு இல்லை

மேலும் பாஜக கூட்டணிக்கு வருமாறு சில முக்கியக் கட்சிகளுக்கு அவர் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ அழைப்பு விடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அப்படி எதுவும் பேசவில்லை.

English summary
Political parties and netas have a sentimental attachment to the Rockfort city and the BJP can’t be an exception. For, this is a place that proved to be a turning point in most Dravidian parties’ political trajectory. This time around, it would test the charming skills of the BJP’s prime ministerial candidate Narendra Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X