For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளரிடம் ஐடி அதிகாரிகள் தீவிர விசாரணை.. ரூ.2.2 கோடி பறிமுதல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: விஜயபாஸ்கர் உதவியாளர் நைனார் திருவல்லிக்கேணியில் வசித்து வருகிறார். அவரது வீட்டிலும் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது வீட்டிலிருந்து ரூ.2.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

அதற்கு நைனார் கணக்கு காட்ட முடியவில்லை. ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ய திட்டமிட்டு இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் ஐடி அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Rs 2.2 Crore money seized from Minister Vijaya Bashkar's associate house

எழும்பூர் ரயில் நிலையத்திற்கு எதிரேயுள்ள தனியார் விடுதியில் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை ஆர்.கே.நகரில் பணம் சப்ளை செய்யப்பட்டதை உறுதி செய்ய உதவின. இந்த நேரத்தில்தான் நைனார் வீட்டிலும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு தகவல் விரைவில் வெளியாகும்.

காலை 6 மணி முதல் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் ஐடி ரெய்டு நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Rs 2.2 Crore money seized from Minister Vijaya Bashkar's associate Ninar's house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X