விஜயகாந்தை ஏனோ இப்போது நினைக்க தோன்றுகிறது... எஸ்.வி.சேகர் டுவீட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெளிநாட்டில் நடத்தப்பட்ட கலைவிழாவை மிகச் சிறப்பாக ஒருவரையும் விடாமல் அழைத்த விஜயகாந்த்தை இப்போது ஏனோ நினைக்க தோன்றுகிறது என்று எஸ்.வி.சேகர் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்காக நிதி திரட்ட அச்சங்கத்தினர் திட்டமி்ட்டிருந்தனர். அதன்படி மலேசியாவில் கலை நிகழ்ச்சியும், நட்சத்திர கலைவிழாவும் நடத்த திட்டமிட்டனர்.

இதையடுத்து, ரஜினி, கமல் உள்ளி்ட்ட முன்னணி நட்சத்திரங்களை அழைத்துக் கொண்டு விழா நேற்று நடத்தப்பட்டது. இந்த விழாவில் விஜய், அஜித், சரத்குமார், ராதிகா உள்ளி்ட்டோருக்கு அழைப்பில்லை. இதை ராதிகாவே டுவி்ட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையி்ல், வெளி நாட்டு நட்சத்திர கலைவிழாவை மிகச்சிறப்பாக ஒருவரைக்கூட அவமானப்படுத்தாமல், (ஏர்போர்ட் வரச்சொல்லி திருப்பி அனுப்பாமல்) சரிசமாக மிக கவுரவமாக நடத்தி,நடிகர் சங்க கடனை அடைத்த விஜயகாந்த் அவர்களை ஏனோ இப்போது நினைக்க தோன்றுகிறது என்று கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
S.Ve.Shekher tweets that When Vijayakanth was President of Nadigar Sangam, he invited all the artists without fail. He also given back the debt of the sangam.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற