For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருமங்கலத்தில் போட்டியிட்டாலும் சசிகலா வெல்வாரா? களநிலவரம் இதுதான்

சசிகலா முதல்வராக வேண்டும்; திருமங்கலத்தில் போட்டியிட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. திருமங்கலம் தொகுதி நிலவரம் தொடர்பான களவிசாரணை இது.

By Mathi
Google Oneindia Tamil News

மதுரை: முதல்வர் பதவியேற்க வலியுறுத்தப்படும் சசிகலா திருமங்கலத்தில் போட்டியிடுவார் என்றே கூறப்படுகிறது. திருமங்கலத்தில் ஜாதி மற்றும் பண பலத்தை நம்பிதான் சசிகலா களமிறங்கும் சாத்தியங்கள் இருப்பதாக அத்தொகுதி வாக்காளர்கள் கூறுகின்றனர்.

அதிமுக பொதுச்செயலர் பதவியைத் தொடர்ந்து முதல்வர் இருக்கையை நோக்கி சசிகலா நகருகிறார். சசிகலாவிடம் முதல்வர் பதவியை ஒப்படைக்க வேண்டும் என்ற நெருக்கடி பன்னீர்செல்வத்துக்கு அதிகரித்துள்ளது.

அப்படி முதல்வர் பதவி ஏற்கும் சசிகலா எம்.எல்.ஏவாவதற்காக தம்முடைய திருமங்கலம் தொகுதியை விட்டுத் தரப் போவதாக அமைச்சர் உதயகுமார் கூறி வருகிறார். அந்தளவுக்கு சசிகலாவுக்கு திருமங்கலத்தில் ஆதரவு உள்ளதா? உதயகுமாரின் இந்த அளவுக்கு மீறிய ஆர்வத்துக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா? என நாம் களவிசாரணையில் இறங்கினோம்.

வெளியூர் வேட்பாளர்கள்

வெளியூர் வேட்பாளர்கள்

நமது விசாரணையில் கிடைத்த திருமங்கலம் களநிலவரம் இதுதான்: திருமங்கலத்தைப் பொறுத்தவரையில் வந்தாரை வாழவைக்கும் தொகுதியாகவே இருக்கிறது. இத்தொகுதியில் பெரும்பாலும் போட்டியிட்டு வென்றவர்கள் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். ஒன்றிரண்டு பேர்தான் உள்ளூர் வேட்பாளர்களாக போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகி இருந்திருக்கின்றனர்.

35% முக்குலத்தோர் வாக்குகள்

35% முக்குலத்தோர் வாக்குகள்

திருமங்கலம் யூனியனில் பிரமலை கள்ளர்களும் கள்ளிக்குடி யூனியனில் சேர்வை; டி. கல்லுப்பட்டியில் மறவர்களும் தீர்மானிக்கும் சக்திகள். ஒட்டுமொத்தமாக முக்குலத்தோர் வாக்குகள் சுமார் 35% இத்தொகுதியில் உள்ளது.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

அதிமுக கட்சியைப் பொறுத்தவரையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கணிசமாக உள்ளனர். முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம், மாவட்ட செயலர் ராஜன்செல்லப்பா, நகரச் செயலர் விஜயன் ஆகியோர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். சட்டசபை தேர்தலின் போது உதயகுமாருக்கு ஆதரவாக களமிறங்க மறுத்து களேபரமே நடந்தேறிய சம்பவங்களும் உண்டு.

ஆதரவாளர்கள் இல்லாத அமைச்சர்

ஆதரவாளர்கள் இல்லாத அமைச்சர்

இதனால்தான் அமைச்சர் உதயகுமார் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் அமைச்சர் உதயகுமாருக்கு எதிராக இத்தொகுதியில் சுட்டிக்காட்டும்பாடியான ஆதரவாளர்கள் இல்லை.

பேனர்கள் குறைவு

பேனர்கள் குறைவு

சசிகலா பொதுச்செயலராக வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பேனர்கள் வைக்கப்பட்ட போது திருமங்கலம் டவுனில் மொத்தமே 3 பேனர்கள் வைக்கப்பட்டன. அதையும் கூட ஓபிஎஸ்-ன் பரம எதிரியான முன்னாள் மாவட்ட செயலர் ஜெயராமன்தான் வைத்திருந்தார்.

சசிகலா படங்கள் சிதைப்பு

சசிகலா படங்கள் சிதைப்பு

சசிகலா பொதுச்செயலரான நிலையில்தான் வேறுவழியே இல்லாமல் அடுத்தடுத்து பேனர்கள் முளைக்கத் தொடங்கியுள்ளன. ஆனால் திருமங்கலம் டவுனில் வைக்கப்பட்டிருக்கும் 75% பேனர்களில் சசிகலாவின் முகம் கிழிக்கப்பட்டும் சாணியடிக்கப்பட்டும் சகதியடிக்கப்பட்டுமாகவே சிதைக்கப்பட்டதாக இருக்கிறது.

ஸ்ரீதர்வாண்டையார்

ஸ்ரீதர்வாண்டையார்

திருமங்கலத்தில் இன்று ஒட்டப்பட்ட ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் சார்பிலான சசிகலா ஆதரவு போஸ்டர்கள்தான் சேதாரம் இல்லாமல் இருக்கின்றன. நாளை காலைதான் இந்த போஸ்டர்கள் எப்படி இருக்கின்றன என்பது தெரியவரும்.

ஜாதி, பணம்...

ஜாதி, பணம்...

அதிமுகவில் இப்படி அதிருப்தி நிலை இருக்கிறது. இருந்தபோதும் ஜாதி மற்றும் பண பலத்தால் இத்தொகுதியை வளைக்க முடியும் என சசிகலா தரப்பு நினைக்கலாம். ஏனெனில் பணத்துக்கு வாக்குகள் பேரம்பேசப்படும் பார்முலாவை தொடங்கி வைத்ததும் திருமங்கலம்தான். இதுதான் மன்னார்குடி தரப்புக்கு மலைபோன்ற நம்பிக்கையாக இருக்கிறது. இதுதான் திருமங்கலம் தொகுதியின் கள நிலவரம்.

English summary
Tamilnadu Minister RB Udayakumar said that he ready to resign the MLA Post for ADMK General Secretary Sasikala to contest in Thirumangalam constituency
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X