For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக பொதுக்குழு தீர்மானத்திற்கு தடை கோரி சசிகலா, தினகரன் திடீர் மனு- ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு நோட்டீஸ்

அதிமுக பொதுக்குழுவில் தங்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு தடை கேட்டு சசிகலா, தினகரன் தரப்பில் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா, தினகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 12ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்கழு கூட்டம் நடைபெற்றது. இதில் தினகரனை கட்சியில் இருந்து நீக்குவதாகவும், கட்சியில் இனி பொதுச்செயலாளர் என்ற பொறுப்பே கிடையாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் சசிகலாவின் பொதுச்செயலாளர் பொறுப்பு செல்லாது என்பதே மறைமுக அர்த்தம்.

Sasikala and Dinakaran filed petitoin seeking ban for ADMK resolutions

இந்நிலையில் பெங்களூரு சிறையில் இருக்கும் அதிமுக அம்மா அணி பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் துணை பொதுச்செயலாளர் தினகரன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அதிமுக பொதுக்கழு நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு தடை கோரப்பட்டுள்ளது.

இதே போன்று கட்சியின் வங்கிக் கணக்குகளை பழனிசாமி தரப்பு கையாளவும் தடை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அதிமுகவின் ஆவணங்களை இவர்களை கையாளவும் தடை கேட்கப்பட்டுள்ளது. இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. வாதங்களைக் கேட்ட நீதிபதி கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக இருக்கும் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் நவம்பர் 29-ந் தேதி இது குறித்து பதிலளிக்க நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

English summary
ADMK amma team General seretary V.K.Sasikala and Deputy Secretary Dinakaran moved highcourt seeking ban for resolutions passed by CM Palanisamy faction.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X