For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'சின்னம்மா நீங்க முதல்வராகனும்' ... அதிமுக அலுவலகத்தில் தொடங்கியது புதிய நாடகம்!

அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகளை இன்று சந்தித்து வருகிறார் சசிகலா. வரும் 9-ந் தேதி வரை இச்சந்திப்பு நடைபெற உள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவின் மாவட்ட நிர்வாகிகளை அதிமுக தலைமை அலுவலகத்தில் சந்தித்து வருகிறார் சசிகலா. இந்த நாடகத்தில் சின்னம்மா நீங்கதான் முதல்வராகனும் என்ற கோரஸ் 6 நாட்களுக்கும் முன்வைக்கப்படுகிறது.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் முதல்வரானார். இப்பதவியை உடனே அடைய முடியாமல் போனதில் சசிகலா தரப்பு ரொம்பவே அதிர்ந்தது.

சசியே பொதுச்செயலர்

சசியே பொதுச்செயலர்

இதனால் திட்டமிட்டு அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் போயஸ் கார்டனுக்கு வரவழைத்து, சின்னம்மா நீங்கதான் பொதுச்செயலராகனும்' என கெஞ்ச வைக்கும் நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. அதேபோல் ஒவ்வொரு மாவட்ட அமைப்புகளும் சசிகலாவே பொதுச்செயலர் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டன.

பொதுச்செயலரானார்

பொதுச்செயலரானார்

தமக்கு அதிமுக நிர்வாகிகளிடையே மிகப் பெரிய ஆதரவு இருக்கிறது என்ற தோற்றத்தை உருவாக்க சசிகலா நடத்திய நாடகத்தை அதிமுக தொண்டர்களால் சசிகிக்க முடியாமல் போனது. அதைபற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிமுகவின் பொதுச்செயலர் பதவியைக் கைப்பற்றிவிட்டார் சசிகலா.

முதல்வர் பதவி

முதல்வர் பதவி

தற்போது முதல்வர் பதவிக்கு குறிவைத்திருக்கிறார் சசிகலா. எப்படியும் முதல்வராகிவிடுவது என்பதில் உறுதியாகி இருக்கும் அவர் இந்த முறையும் அதிமுகவில் தமக்கு பேராதரவு இருக்கிறது என்பதை காட்டிக் கொள்ள இன்று முதல் 9-ந் தேதி வரை அதிமுக மாவட்ட நிர்வாகிகளை கட்சி தலைமை அலுவலகத்தில் நடத்தி வருகிறார் சசிகலா.

விரைவில் முதல்வர்?

விரைவில் முதல்வர்?

இந்த சந்திப்பிலும் 'சின்னம்மா நீங்கதான் முதல்வராகனும்' என்ற கோரஸ்தான் பாடப்படுகிறது. இந்த நாடகத்தின் இறுதியில் ஜனவரி 10 அல்லது 12-ந் தேதி முதல்வர் பதவியை ஏற்றுவிடுவார் சசிகலா என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.

English summary
ADMK general secretary Sasikala will hold district-wise meeting of office bearers from today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X