இமாலய வெற்றி பெற்ற தினகரன் தலைமையில் செயல்பட தயார்.. சசிகலா புஷ்பா அந்தர் பல்டி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  டிடிவி எப்படி சசிகலா புஷ்பாவை சந்திக்கலாம்?- வீடியோ

  சென்னை: சசிகலா குடும்பத்தை மிகக் கடுமையாக விமர்சித்து வந்த அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா இன்று திடீரென தினகரனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் தினகரன் தலைமையை ஏற்று தாம் செயல்பட தயாராக உள்ளதாகவும் அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

  ஜெயலலிதாவால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் சசிகலா புஷ்பா. ராஜ்யசபாவிலேயே ஜெயலலிதா தம்மை தாக்க முயன்றதாக கூறி புயலைக் கிளப்பினார் சசிகலா புஷ்பா.

  தனி ஆவர்த்தனம்

  தனி ஆவர்த்தனம்

  யலலிதா மறைவுக்கே சசிகலா குடும்பமே காரணம் என்றும் கடுமையாக விமர்சித்து வந்தார். அதிமுகவில் அணிகள் சுக்குநூறாக சிதைந்த போதும் டெல்லியிலேயே முகாமிட்டு டெல்லி லாபியை பலப்படுத்தி வந்தார்.

  செய்தியாளர்களுடன் சந்திப்பு

  செய்தியாளர்களுடன் சந்திப்பு

  இந்நிலையில் இன்று திடீரென சென்னை பெசன்ட் நகரில் தினகரனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் சசிகலா புஷ்பா. பின்னர் செய்தியாளர்களிடம் சசிகலா புஷ்பா கூறியதாவது:

  மகத்தான வெற்றி

  மகத்தான வெற்றி

  ஆர்.கே. நகரில் அண்ணன் தினகரன் இமலாய வெற்றியைப் பெற்று சரித்திரம் படைத்துள்ளார். ஆளும் கட்சியை எதிர்த்து தினகரன் மகத்தான வெற்றி பெற்றுள்ளார்.

  அஞ்சாமல் போராடி வென்றவர்

  அஞ்சாமல் போராடி வென்றவர்


  எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்சாமல் நின்று போராடி வென்றுள்ளார் தினகரன். ஆர்.கே.நகர் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் தினகரன் தலைமையை ஏற்று உழைக்கத் தயாராக உள்ளோம்.

  இவ்வாறு சசிகலா புஷ்பா கூறினார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  AIADMK Expelled Rajya Sabha MP Sasikala Pushpa today met Dinakaran and joined their Camp.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற