For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சனிக்கிழமை வந்தாலே.. பீதி அடையும் சென்னை!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மக்களுக்கு வர வர இந்த சனிக்கிழமை என்றாலே டென்ஷனாகி விடுகிறது. காரணம் அடுத்தடுத்து சனிக்கிழமைகளில் நடக்கும் அசம்பாவித சம்பவங்களால்.

நேற்று சென்னையில் எழிலகம் கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்துதான் இந்த சனிக்கிழமை அச்சத்துக்கு முக்கியக் காரணம்.

கடந்த சில மாதங்களாகவே சனிக்கிழமைகளில் சென்னயைில் நடைபெற்ற சில அசம்பாவிதங்கள் மக்களை கவலை கொள்ளச் செய்துள்ளன.

ஜூன் 28ம் தேதி 11 மாடிக் கட்டட விபத்து

ஜூன் 28ம் தேதி 11 மாடிக் கட்டட விபத்து

ஜூன் மாதம் 28ம் தேதி சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டடக் குடியிருப்பு இதே போல சனிக்கிழமையன்று மாலைதான் இடிந்து தரைமட்டமானது. இந்த கோர விபத்தில் 61 பேர் பலியானார்கள்.

ஜூலை 5ம் தேதி அலமாதி சுவர் இடிந்து 11 பேர் பலி

ஜூலை 5ம் தேதி அலமாதி சுவர் இடிந்து 11 பேர் பலி

அதேபோல ஜூலை 5ம் தேதி சனிக்கிழமையன்று திருவள்ளூர் மாவட்டம் அலமாதி என்ற இடத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 11 கட்டுமானத் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

ஜூலை 12ம் தேதி ஸ்டேட் வங்கி தீவிபத்து

ஜூலை 12ம் தேதி ஸ்டேட் வங்கி தீவிபத்து

அதேபோல ஜூலை 12ம் தேதி சனிக்கிழமையன்று பாரிமுனையில் உள்ள பழமையான பாரத ஸ்டேட் வங்கிக் கட்டடத்தில் தீவிபத்து ஏற்பட்டு பெரும் பொருட் சேதம் ஏற்பட்டது.

நேற்று எழிலகத்தில்

நேற்று எழிலகத்தில்

இந்த நிலையில் நேற்று பழமையான எழிலகம் கட்டடத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்தக் கட்டடம் ஏற்கனவ தீவிபத்தை சந்தித்த கட்டடம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
For the last two months many fatal incidents have happened in Chennai and peopl are worried over this accidents.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X