எடப்பாடி அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லுமா, செல்லாதா? ஜூலை 11ல் சுப்ரீம்கோர்ட் விசாரணை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான ம்பிக்கை வாக்கெடுப்பு செல்லுமா, செல்லாதா என்பது குறித்து ஜூலை 11ம் தேதி சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்துகிறது. இதுகுறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

பிப்ரவரி 18ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி வெற்றி பெற்றது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முறைகேடு நடைபெற்றதாகவும், எம்எல்ஏக்களை ரெசார்ட்டில் அடைத்து வைத்தது மிரட்டி வைத்து, ஓட்டுக்களை பெற்றதாகவும், குற்றம்சாட்டி, பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

SC posts Mafoi Pandiyarajan's plea against EPS Govt trust vote for July 11

நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய பாண்டியராஜன் கேட்டுக்கொண்டார். இன்று இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 11ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. மேலும் அன்றைய திினம், மத்திய அரசின் அட்வகேட் ஜெனரல் கே.கே.வேணுகோபால் இவ்வழக்கில் ஆஜராக வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
SC posts Mafoi Pandiyarajan's plea against EPS Govt trust vote for July 11, asks AG KK Venugopal also to be present during the hearing.
Please Wait while comments are loading...