For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வடகிழக்குப் பருவமழை: பாடங்களை விரைந்து முடிக்க பள்ளி, கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்!

வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளதையடுத்து பாடங்களை விரைந்து முடிக்க பள்ளி, கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பாடங்களை விரைந்து முடிக்க பள்ளி, கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் என மூன்று மாதங்கள் தொடர்ந்து மழை பெய்யும். சில நேரங்களில் புயல்கள் உருவாகவும் வாய்ப்பு உண்டாகும்.

தொடர் மழை காரணமாக தாழ்வானப் பகுதிகளில் தண்ணீர் தேங்கும். கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்படும்.

முன்கூட்டியே பாடங்களை முடிக்க

முன்கூட்டியே பாடங்களை முடிக்க

இதனால் பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இந்நிலையில் விடுமுறையால் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்கூட்டியே பாடங்களை நடத்தி முடிக்க பள்ளி, கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு சராசரியாக பெய்யும்

இந்த ஆண்டு சராசரியாக பெய்யும்

தமிழகத்தில் இதுவரை வடகிழக்குப் பருவமழை தொடங்காத நிலையில் நவம்பர் முதல்வாரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஆண்டு சராசரி அளவு மழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது.

நீர்நிலைகள் நிரம்பியுள்ளது

நீர்நிலைகள் நிரம்பியுள்ளது

அதேநேரத்தில் தென்மேற்கு பருவமழை இன்னும் நீடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது.

மழையால் தண்ணீர் தேக்கம்

மழையால் தண்ணீர் தேக்கம்

இதனிடையே வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The school and colleges have been advised to complete the subjects for the North-East monsoon. North east monsoon will be started in Tamil Nadu within couple of weeks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X