For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக அணியில் காஞ்சி, தூத்துக்குடி, பொள்ளாச்சி, சேலத்துக்கு கட்சிகளிடையே போட்டி!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: பாரதிய ஜனதா அணியில் தேமுதிக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கான தொகுதிகளை பெறுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.

பாஜக தலைமையிலான அணியில் மதிமுக, பாமக ஆகியவை இடம்பெறுவது உறுதியாகி உள்ளன. தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதேபோல் இந்திய ஜனநாயக கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவையும் பாஜக அணியில் இணைய இருக்கின்றன.

காஞ்சி, தூத்துக்குடி சிக்கல்

காஞ்சி, தூத்துக்குடி சிக்கல்

இதில் மதிமுக கேட்கும் காஞ்சிபுரம் தொகுதியை பாமகவும் தூத்துக்குடியை பாஜகவும் விரும்புகின்றனவாம்.

பொள்ளாச்சியை கேட்கும் கொங்கு

பொள்ளாச்சியை கேட்கும் கொங்கு

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியோ பொள்ளாச்சி தொகுதியை எதிர்பார்க்கிறதாம்.

பாமக விரும்பும் தொகுதிகள்

பாமக விரும்பும் தொகுதிகள்

பாமக தரப்பிலோ தர்மபுரி, ஆரணி, சேலம், அரக்கோணம், விழுப்புரம், மயிலாடுதுறை, வட சென்னை, திருவண்ணாமலை தொகுதிகளை கேட்கிறார்களாம்.

சேலத்துக்கு குறிவைக்கும் பாஜக

சேலத்துக்கு குறிவைக்கும் பாஜக

இதில் சேலத்தில் போட்டியிட பாரதிய ஜனதா கட்சி விரும்புகிறதாம்

பாஜக கேட்கும் தொகுதிகள்

பாஜக கேட்கும் தொகுதிகள்

தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், வேலூர், திருச்சி, நாமக்கல், கோவை, நீலகிரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகியவற்றை குறிவைக்கிறதாம் பாஜக.

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்

இதில் என்.ஆர். காங்கிரஸ் வந்தால் புதுச்சேரி தொகுதியை அக்கட்சியிடம் கொடுத்துவிடவும் பாஜக திட்டமிட்டிருக்கிறதாம்.

தேமுதிக தொகுதிகள்

தேமுதிக தொகுதிகள்

தேமுதிக தரப்பில் மத்திய சென்னை, திருநெல்வேலி, மதுரை, தேனி, சிவகங்கை, நாகப்பட்டினம், சிதம்பரம், கடலூர், கரூர், திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் ஆகிய தொகுதிகள் அவசியம் வேண்டும் என்பது முதல் கட்ட டிமாண்டாம். இதில் பாஜக சொல்லப் போகும் முடிவை வைத்தே கூட்டணி பற்றி தேமுதிக தலைமை முடிவு செய்யும் என்றும் கூறப்படுகிறது.

பெரம்பலூரை கேட்கும் பச்சமுத்து

பெரம்பலூரை கேட்கும் பச்சமுத்து

இதேபோல் இந்த கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியை எதிர்பார்க்கிறாராம் இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பாரிவேந்தர் என்ற பச்சமுத்து.

தொடக்கத்தில் இப்படி இழுபறி இருந்தாலும் சரி செய்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு இருக்கிறதாம் பாஜக.

English summary
Seat Sharing talks began within the BJP led Mega Allaince in Tamil Nadu for upcoming loksabha elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X