செங்கோட்டை அருகே 7 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்... கைதான 3 பேரிடம் தீவிர விசாரணை
செங்கோட்டை : புளியரை அருகே ரோந்துப் பணியின் போது தப்பி ஓடிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 7 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
அவர்கள் எதற்காக நாட்டு வெடிகுண்டுகளை கொண்டு சென்றனர், அவர்களின் சதித்திட்டம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கோட்டை அருகே உள்ள புளியரையில் கடந்த சில நாட்களாக காவல் துறையினர் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மதியம் தெற்குமேடு பகுதியில் தென்காசி காவல் உதவி கண்காணிப்பாளர் அரவிந்தனின் உத்தரவின் பேரில் குரங்கன் ஓடை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது காவலர்களை கண்டு 3 பேர் ஓடினர்.
அவர்களை துரத்தி பிடித்து சோதனை செய்த போது, அவர்களிடமிருந்து 7 சிறிய நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.

அந்த நாட்டு வெடிகுண்டுகளை கொண்டு சென்ற தெற்குமேடு பகுதியை சேர்ந்த கருப்பசாமி, சரவணக்குமார், எபனேசர் ஆகியோரை கைது செய்து புளியரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்கள் அதனை தோட்டத்தின் காவலுக்காக வும் பன்றிகளை கொல்வதற்காகவும் கொண்டு செல்வதாக முதற்கட்ட விசாரணையில் போலீசார் தெரிவித்தனர்.
கடந்த 2010 ஆம் ஆண்டில் தற்போது கைதான கருப்பசாமி வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது அது வெடித்து விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications