சட்டசபை நடக்கும் போது திஹார் ரிட்டன் தினகரன் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டிடிவி தினகரனுடன் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சிலர் இன்று ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் தனது வீட்டில் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்துவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

தினகரன் பெங்களூரு சென்று திரும்பிய நிலையில் நேற்று முதல்வரிடம் பேசியது தொடர்பாக விவாதித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினகரனுடன் சந்திப்பு

தினகரனுடன் சந்திப்பு

தமிழக சட்டசபையில் துறை ரீதியான மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில் டிடிவி.தினகரனுடன் 6 அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தங்கத்தமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி,தோப்பு வெங்கடாச்சலம், பழனியப்பன், ஆம்பூர பாலசுப்பிரமணியும் ஆகிய எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்தினர்.

முதல்வர் ஆலோசனை

முதல்வர் ஆலோசனை

சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்துவரும் நிலையில் எம்எல்ஏக்களுடன் அவர் ஆலோசனை நடத்தினர். நேற்று மாலையில் டிடிவி தினகரன் பெங்களூரு சென்றிருந்த போது சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் டிடிவி தினகரனை கட்சியில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

முதல்வரிடம் வலியுறுத்தல்

முதல்வரிடம் வலியுறுத்தல்

எம்ஜிஆர் பிறந்தநாள் விழா, இப்தார் விருந்து ஆகியவைகளை டிடிவி தினகரன் தலைமையில் நடத்த வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பிய தினகரனை இன்று காலையில் முதல்வரிடம் பேசியது தொடர்பாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

தினகரனுக்கு ஆதரவு

தினகரனுக்கு ஆதரவு

60 நாட்கள் பொறுமை காக்குமாறு சசிகலா அறிவுறுத்தியுள்ளார் என்று கூறிய தினகரன் இனி கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபடப்போவதாகவும் கூறியுள்ளார். இதுவரை அவருக்கு 34 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். எம்பிக்களும் நேரில் சந்தித்து வருகின்றனர்.

எம்எல்ஏக்களின் கோரிக்கை

எம்எல்ஏக்களின் கோரிக்கை

32 எம்எல்ஏக்கள் மட்டுமல்ல அனைத்து எம்எல்ஏக்களுமே டிடிவி தினகரனை சந்திப்பார்கள் என்று கூறியுள்ளார் தங்கத்தமிழ் செல்வன். கட்சிக்கு டிடிவி தினகரன், ஆட்சிக்கு எடப்பாடி பழனிச்சாமி என்று வலியுறுத்தி வருகின்றனர். இவர்களின் கோரிக்கைகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செவிசாய்ப்பாரா?

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dhinakaran’s residence in Adyar in Chennai was full of activity with his supporters coming one after the other to express their solidarity with him, today 6 mlas including Senthil Balaji meets and discuss TTV Dinakaran.
Please Wait while comments are loading...