ஓட்டுக்கு 6000 கொடுத்த துரோக அரசுக்கு தொழிலாளர்களுக்கு கொடுக்க வக்கில்லையா? விளாசும் மாஜி அமைச்சர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
அரசு மெத்தனமாக இருக்கிறது -செந்தில்பாலாஜி- வீடியோ

சென்னை: ஆர்கே நகரில் ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுத்த துரோக அரசுக்கு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆயிரங்கள் கொடுக்க முடியாதா என முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு வழங்கும் ஊதிய உயர்வை ஏற்க மறுத்து தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் நேற்றிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

Senthilbalaji slams govt on the transport workers issue

இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னை உள்ளிட்ட பல இடங்களில் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சரும் தினகரனின் ஆதரவாளருமான செந்தில்பாலாஜி, தமிழக அரசு குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது ஆர்.கே நகரில் ஓட்டுக்கு 6 ஆயிரம் கொடுக்க முடிந்த துரோக அரசால் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஆயிரங்கள் வழங்க வக்கில்லையா...?

விலகிசெல்.. இவ்வாறு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former ADMK Mimister and Dinakaran supporter Senthilbalaji slams govt on the transport workers issue.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற