"இனி அமெரிக்காவுக்கு நேட்டோ தேவையில்லை.." கண்கள் சிவந்த டிரம்ப்.. திடீரென ஆவேசமாக பாய்ந்தார்
வாஷிங்டன்: ஈரான் போரில் தலையிட்டு டிரம்ப்பிற்கு உதவ நேட்டோ நாடுகள் மறுத்துள்ளன. இதனால் கோபமடைந்த டிரம்ப், அந்த நேட்டோ நாடுகள் மீது பாய்ந்துள்ளார். ஆண்டுதோறும் பல பில்லியன் செலவிட்டு ஐரோப்பிய நாடுகளை அமெரிக்கா பாதுகாப்பதாகக் குறிப்பிட்ட டிரம்ப், இருந்த போதிலும் நேட்டோ நாடுகள் அமெரிக்காவுக்குத் தேவையான நேரத்தில் உதவவில்லை எனச் சாடியுள்ளார்.
ஈரான் போரில் அமெரிக்காவுக்கு விரும்பிய முடிவு கிடைக்கவில்லை. போர் தொடங்கியது முதலே ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. கமேனி உயிரிழந்த போதும் ஈரான் சரணடையவில்லை. போர் 3வது வாரத்தில் நுழைந்துள்ள சூழலில் ஈரான் மற்ற நாடுகளை உதவிக்குக் கோரியிருந்தார்.

டிரம்ப்
இதற்கிடையே ஈரானுக்கு எதிரான அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவ பெரும்பாலான நேட்டோ உறுப்பு நாடுகள் மறுப்பு தெரிவித்துள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதை அனுமதிக்கக் கூடாது என்பதை இந்த நாடுகள் ஒப்புக்கொண்ட போதிலும், போர் நடவடிக்கையில் பங்கேற்க மறுப்பு தெரிவித்துவிட்டதாக டிரம்ப் கூறியுள்ளார்.
நேட்டோவை ஒரு வழிப் பாதை என்று விமர்சித்த டிரமப், ஆண்டுதோறும் இந்த சிறிய ஐரோப்பிய நாடுகளைப் பாதுகாக்க அமெரிக்கா பல நூறு பில்லியன் டாலர்களை செலவிடுவதாகவும், ஆனால் அதற்குத் தக்க உதவி கிடைக்கவில்லை என்றும் அவர் சாடியுள்ளார். அமெரிக்கா நிச்சயம் வெல்லும் என கூறிய டிரம்ப், நேட்டோ நாடுகளின் உதவி இனி தேவையில்லை என்றும் எப்போதுமே தேவைப்பட்டதில்லை என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். ஜப்பான், ஆஸ்திரேலியா, தென் கொரியா போன்ற நாடுகளின் உதவியும் அமெரிக்காவிற்குத் தேவையில்லை எனக் கூறினார்.
பரபர போஸ்ட்
இது தொடர்பாக டிரம்ப் மேலும், "ஈரானின் பயங்கரவாத ஆட்சிக்கு எதிரான மத்திய கிழக்கு ராணுவ நடவடிக்கைகளில் சேர பெரும்பாலான நேட்டோ நாடுகள் விரும்பவில்லை. ஈரானுக்கு அணு ஆயுதம் கிடைக்கக்கூடாது என்பதில் ஒருமித்த கருத்து இருந்தபோதிலும் இந்த முடிவை எடுத்துள்ளனர். அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் பல நூறு பில்லியன் டாலர்களை செலவழித்து அவர்களைப் பாதுகாக்கும் போதும், நேட்டோ ஒரு ஒரு வழிப் பாதையாகவே இருக்கிறது. ஆனால், இதில் நான் ஆச்சரியப்படவில்லை.
தேவையின்போது நேட்டோ நாடுகள் அமெரிக்காவிற்கு உதவுவதில்லை. அதிர்ஷ்டவசமாக அமெரிக்கா ஈரானின் ராணுவத்தைத் தகர்த்துவிட்டது. அவர்களின் கடற்படை, விமானப்படை, வான் பாதுகாப்பு, ராடார் அமைப்புகள் அனைத்தும் காலி. அவர்களின் அனைத்து தலைவர்களும் போய்விட்டார்கள். இதன் மூலம் ஈரான் இனி அமெரிக்கா, அதன் கூட்டாளிகள் அல்லது உலகை அச்சுறுத்தாது என்பது உறுதி.
தேவையில்லை
இந்த ராணுவ வெற்றிகளால் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். அமெரிக்காவுக்கு நேட்டோ நாடுகளின் உதவி இனி தேவை இல்லை அல்லது அவர்கள் உதவியைக் கேட்கும் விருப்பமும் இல்லை. சொல்லப்போனால் நமக்கு ஒருபோதும் அவர்கள் தேவைப்பட்டதில்லை. ஜப்பான், ஆஸ்திரேலியா, தென் கொரியா போன்ற நாடுகளுக்கும் இதுவே பொருந்தும்.. எவரது உதவியும் எங்களுக்குத் தேவையில்லை என்பதை உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடான அமெரிக்காவின் அதிபராக நான் சொல்லிக் கொள்கிறேன்" என்றார்.
பின்னர் ஓவல் அலுவலகத்தில் பேசிய டிரம்ப், "மூன்றாவது வாரமாக நடக்கும் அமெரிக்க-இஸ்ரேல் போருக்கு நேட்டோ நாடுகள் ஆதரவு அளித்தாலும், களத்தில் ஈடுபட விருப்பம் இல்லை. எல்லோரும் எங்களுடன் ஒத்துப்போகிறார்கள், ஆனால் அவர்கள் உதவ விரும்பவில்லை. இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும், ஏனெனில் இது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது" என்றார்.
ஹார்முஸ் ஜலசந்தி
சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாக்க உதவுமாறு டிரம்ப் கோரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும், இந்த கோரிக்கைகளை நேட்டோ மற்றும் பிற நட்பு நாடுகள் நிராகரித்தன. உலக எண்ணெய் கப்பல் போக்குவரத்தின் ஐந்தில் ஒரு பங்கைக் கையாளும் ஹார்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் தாக்குதல்கள் சர்வதேச பொருளாதாரத்தையே பாதிக்கும் சூழலை உருவாகியுள்ளது.
மோதல் தொடங்கியதில் இருந்து சுமார் 20 கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன. சில கப்பல்கள் ஜலசந்தியை கடக்க அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும் அமெரிக்கா, இஸ்ரேல் அல்லது அவர்களின் கூட்டாளி நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல அனுமதி இல்லை என்பதை ஈரான் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications