For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குரல் வாக்கெடுப்பின் மூலம்... சட்டசபையில் 7 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்

Google Oneindia Tamil News

சென்னை: மூன்று நாட்கள் நடைபெற்ற தமிழக சட்டசபை குளிர்காலக் கூட்டத்தொடரில், நேற்று குரல் வாக்கெடுப்பின் மூலம் 7 சட்ட மசோதாக்கள் நிறைவேறியுள்ளன.

தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த வியாழன் அன்று தொடங்கி, நேற்று முடிவடைந்தது. மூன்று நாட்கள் மட்டுமே நடைபெற்ற இந்த கூட்டத் தொடரில், நேற்று 7 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப் பட்டுள்ளன.

Seven new bills passed in Tamilnadu assembly

இந்த கூட்டத்தில், நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான இழப்பீடு அளிப்பது குறித்த சட்ட மசோதா, தமிழ்நாடு நிதி ஒதுக்கச் சட்ட மசோதா, உள்ளாட்சி நிதித் தணிக்கை சட்ட மசோதா, அண்ணாமலை பல்கலைக்கழக (திருத்த) சட்ட மசோதா, தமிழ்நாடு மதிப்பு கூட்டுவரி (திருத்த) சட்ட மசோதா, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் சட்ட மசோதா மற்றும் நீதிபதிகள் நியமனம் தொடர்பான தீர்மானம் ஆகியவை தாக்கல் செய்யப்பட்டன.

சட்டசபையில் இவை நிறைவேற்றப்படுவதற்காக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு மதிப்பு கூட்டுவரி (திருத்த) சட்ட மசோதா நிறைவேறுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த மசோதா நிறைவேறினால், சர்க்கரை ஆலை அதிபர்களுக்கு லாபமும், மக்களுக்கு சர்க்கரை விலையினால் சுமை வந்து சேரும் என்று அவர் குறிப்பிட்டார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் எம்.சி.சம்பத், ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் சர்க்கரையில் விலை மாற்றம் இருக்காது என்று உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பின் மூலம் அந்த சட்ட மசோதா நிறைவேறியது.

இதேபோல், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் தொடர்பான அரசினர் தீர்மானத்தை, புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி, மனிதநேய மக்கள் கட்சி ஜவாருல்லா ஆகியோர் எதிர்த்தனர். மத்திய அரசின் இந்த சட்டத்தால், நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதிக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி குறிப்பிட்டார். ஹைகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் மாநில அரசின் கருத்தைக் கேட்கும் வாய்ப்பு இந்த சட்டத்தில் இல்லை என்று ஜவாருல்லா குறிப்பிட்டார். ஆனபோதும், குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த தீர்மானம் நிறைவேறியது.

English summary
In Tamilnadu assembly seven new bills have been passed yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X