For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ள சோபன் பாபு சிலையை அகற்றக் கோரிக்கை!

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையின் முக்கிய சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தெலுங்கு நடிகர் சோபன் பாபு சிலையை அகற்றுமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் சோபன் பாபு, கடந்த 2008-ம் ஆண்டு சென்னையில் காலமானார்.

Shoban Babu Statue that juts into the footpath

அவருக்கு நெல்சன் மாணிக்கம் சாலையில், அவரது குடும்பத்தின் பெரிய சிலை வைத்துள்ளனர். இந்த சிலை அவர்களுக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தின் ஒரு பகுதி சென்னை மாநகராட்சிக்கு சொந்தமானது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறுகையில், 'சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தின் பெரும் பகுதி அரசுக்கு சொந்தமானது. ஆனால் தங்கள் சொந்த இடத்தில் சிலையை வைத்துள்ளதாக சோபன் பாபு குடும்பத்தினர் பொய் கூறி வருகின்றனர். இந்த சிலை வைக்கப்பட்டதால் இந்த சாலையே கொணைடை ஊசி வளைவு மாதிரி ஆகிவிட்டது. பாதசாரிகள் நடந்து போக இடமே இல்லாமல் போய்விட்டது. எனவே சிலையை அகற்ற வேண்டும்," என்றனர்.

English summary
The statue of actor Sobhan Babu, installed by his family in their private land, has seemingly encroached into public space as the platform on which its podium stands protrudes out of the compound wall taking up a bit of the walkway, inconveniencing pedestrians who have to step down on the road if two walk side by side.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X