திருப்பூரில் இப்படியும் ஒரு கணவர்.. வீணான மனைவிக்கான போராட்டம்.. அதற்காக இப்படியா?
திருப்பூர்: திருப்பூர் முத்தணம்பாளையம் பகுதியில் 48 வயதாகும் ஜான் கென்னடி என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி அலோசியகவிதா. இந்த தம்பதிக்கு 19 வயதில் மகள் இருக்கிறார். இவர், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். ஜான் கென்னடியின் மனைவி அலோசியகவிதா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். அவர் தற்போது உயிருடன் இல்லை. இதனால் ஜான் கென்னடி தவறான முடிவெத்து வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மனைவி மீது அதிக பாசம் வைத்துள்ள கணவர், அவரை பிரிந்து வாழ முடியாமல் தவிப்பார்கள். அப்படியான நிலையில் ஆறுதலான உறவுகள் அவருடன் இருக்க வேண்டும். அப்படியான உறவுகள் உடன் இல்லாமல் போனால், அது பெரிய சிக்கலில் தான் முடியும் . ஏனெனில் அவர்கள் ஆறுதலான பேச்சுக்களையே, நம்பிக்கையான வார்த்தைகளோ இல்லாமல் உடைந்து போவார்கள். அப்படியான சூழலில் ஒருவர் மனநல சிகிக்சை பெற வேண்டும். எந்த நிலையிலும் வாழ்க்கையை முடித்துக் கொள்வது போன்ற கோழைத்தனமான முடிவுகளை எடுக்கவே கூடாது.. திருப்பூர் அருகே நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி-விஜயமங்கலம் இடையே ரயில்வே தண்டவாளத்தில், நேற்று முன்தினம் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து, ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பிணமாக கிடந்தவர், கோவையிலிருந்து சென்னை சென்ற கோவை எக்ஸ்பிரஸ் முன் பாய்ந்து வாழ்க்கையை முடித்துக்செய்து கொண்டது தெரியவந்தது.
ஆனால் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இதையடுத்து அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருப்பூர் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் ரயில் முன் பாய்ந்து வாழ்க்கையை முடித்துக் கொண்டவர், திருப்பூர் முத்தணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 48 வயதாகும் ஜான் கென்னடி என்பது தெரியவந்தது. இவரது மனைவி அலோசியகவிதா. இந்த தம்பதிக்கு 19 வயதில் மகள் இருக்கிறார். இவர், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில், ஜான் கென்னடியின் மனைவி அலோசியகவிதா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்.
இதனால் ஜான் கென்னடி பலரிடம் கடன் வாங்கி, அலோசியகவிதாவுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அலோசியகவிதா இறந்து விட்டார். அன்று முதல் மனைவி இறந்த சோகம் ஒருபுறம், கடனைத் திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டது மற்றொரு புறம் என ஜான் கென்னடி மன வேதனையில் இருந்தார். எனவே இனி வாழ வேண்டும் என்று தவறான முடிவு எடுத்து ரயில் முன் பாய்ந்து வார்ககொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
முக்கிய அறிவிப்பு: எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது.. தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.
-
தாம்பரம் படப்பையில் இளம் பெண் 26 வயதில் சந்திக்கக்கூடாத இழப்பு.. யாருக்குமே நடக்கக்கூடாத சம்பவம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு














Click it and Unblock the Notifications