போ மோனே மோடி தொடங்கி கோ பேக் மோடி வரை.. பாஜகவிற்கு சிம்ம சொப்பனமாகும் தென்னிந்தியா!
தமிழர்கள் இப்போது மோடிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் போராடுவது போலவே கேரளா மக்களும் சென்ற வருடம் போராடினார்கள்.
Recommended Video

சென்னை: தமிழர்கள் இப்போது மோடிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் போராடுவது போலவே கேரளா மக்களும் சென்ற வருடம் போராடினார்கள். அதேபோல் கர்நாடக மக்களும் இப்படி போராடி இருக்கிறார்கள்.
சென்னையில் நடக்கும் ''டிஃபேஎக்ஸ்போ 2018'' எனப்படும் ராணுவ மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்கில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி சென்னை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ''கோ பேக் மோடி'' (#gobackmodi)என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டிங்கில் முதல் இடம்பிடித்துள்ளது. இதில் காலையில் இருந்து டிவிட் செய்யப்பட்டு வருகிறது.
|
வெகு நேரம்
இந்த ''கோ பேக் மோடி'' இன்னும் வைரலாகத்தான் இருக்கிறது. உலக அளவில் தொடர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக இந்த டேக் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. உலகில் எந்த விஷயமும் இப்படி இவ்வளவு நேரம் விவாதிக்கப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
|
கேரளாவிலும்
இதேபோல் கடந்த வருடம் கேரளாவில் மோடிக்கு எதிராக ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது. சிறப்பு என்னவென்றால் அதுவும் உலக அளவில் இடம்பிடித்தது. அவர்கள் உருவாக்கிய ''போ மோனே மோடி'' (#PoMoneModi) என்ற ஹேஷ்டேக்கில், மோடி குறித்தும் பாஜக குறித்தும் எழுதினார்கள். கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டதற்கும், ஓணம் பண்டிகையை வாமன ஜெயந்தி என்று கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
|
கர்நாடகா மட்டும்
அதே சமயம் கர்நாடகாவிலும் இதேபோல் ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். உலக அளவில் டிரெண்ட் ஆகவில்லை என்றாலும் , அவர்கள் உருவாக்கிய ஹேஷ்டேக், இந்திய அளவில் நீண்ட நேரம் வைரலாக இருந்தது. ''பரியோலு மோடி'' (#bariolumodi) என்று இவர்களும், மோடி பொய் சொல்வதாக சொல்லி டிவிட் செய்தார்கள். கர்நாடகாவில் வேலைவாய்ப்பு பற்றிய விவாதம் பிரச்சனை ஆன போது இந்த டேக் வைரலானது.
|
இரண்டு மாநிலம்
இந்த நிலையில் தென்னிந்தியாவில் உள்ள மூன்று மாநிலங்கள் மோடியை மொத்தமாக புறக்கணித்துள்ளது. ஆனால் இன்னும் தெலுங்கானா, ஆந்திரா இது பற்றி பேசவில்லை. ஆனால் அவர்களும் சிறப்பு அந்தஸ்து, நிதி ஒதுக்குதல் என நிறைய விஷயங்களில் கோபமாக இருப்பதால், விரைவில் தெலுங்கு மொழியில் இப்படி ஒரு டேக் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications