ஹெல்மெட் அணியாமல் சென்றால் தொடர்ந்து அபராதம் விதிக்க வேண்டும்: திருச்சி காவல் ஆணையர்

திருச்சி: ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டிகள் சென்றால் அபராதம் விதிப்பதை தவிர்க்கக் கூடாது என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருவெறும்பூர் ரவுண்டானா அருகே நேற்று ஏற்பட்ட சாலை விபத்தில் உஷா என்ற கர்ப்பிணி பெண் மரணம் அடைந்தார். போலீஸ் துரத்தி தாக்கியதில் இவர் பரிதாபமாக மரணம் அடைந்தார்.

இந்த விஷயம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த போலீஸ் அதிகாரி பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் திருச்சியில் ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டிகள் சென்றால் அபராதம் விதிப்பதை தவிர்க்கக் கூடாது என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டிகள் சென்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும், அபராதம் விதிப்பதை நிறுத்த கூடாது என்று அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!