For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'செயல் தலைவர்' முக ஸ்டாலின்... இந்த பதவிக்கு அவர் எப்பவோ வந்திருக்கணும்!

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: இன்றைய திமுக பொதுக் குழுவில் கட்சியின் செயல் தலைவராக முக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்புக்கு சின்ன அளவிலாவது எதிர்ப்பு கிளம்பும் என சிலர் கூறி வந்தனர். மீடியாவும் அப்படித்தான் எதிர்ப்பார்த்தது. ஆனால் என்ன ஆச்சர்யம்... எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலரும் கூட இந்த அறிவிப்பை பலமாக வரவேற்றுள்ளனர்.

Social media, political critics welcome MK Stalin

சமூக வலைத் தளங்களில் முக ஸ்டாலினுக்கு வரவேற்பு குவிய ஆரம்பித்துள்ளது.

"இந்தப் பதவிக்கு முற்றிலும் தகுதியானவர் முக ஸ்டாலின். இன்றைய அரசியல்வாதிகளுள் அனைவராலும் ஏற்கக் கூடிய தலைவர் என்றால் ஸ்டாலின்தான். இந்தப் பதவிக்கு அவர் எப்போதோ வந்திருக்க வேண்டும். மிகவும் காலங்கடந்து தரப்பட்ட புரமோஷன் இது," என்பதுதான் பரவலான கருத்தாகக் காணப்படுகிறது.

இன்னும் நான்காண்டுகளுக்கு மேல் அதிமுக, பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்ய வேண்டியுள்ள நிலையில், ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்தப் பொறுப்பை அவர் மிகக் கவனமாகக் கையாள வேண்டும். மக்கள் நம்பிக்கையைப் பெறுவதுதான் அனைத்தையும்விட முக்கியம். அதற்கான வியூகங்களை இனி அவர் சுதந்திரமாக வகுப்பார் என நம்பலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

'தமிழக அரசியலைப் பொருத்தவரை, அது இன்னொரு தளத்துக்கு நகர்ந்துள்ளது. அது ஜெயலலிதா இல்லாத, கருணாநிதி செயல்பட முடியாத நிலையில் உள்ள களம். மற்ற கட்சிகளோடு ஒப்பிடுகையில், மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ள தலைவர் முக ஸ்டாலின் மட்டுமே. ஓ பன்னீர் செல்வம், சசிகலா போன்றவர்கள் தேர்தலில் நின்று முதல்வர் வேட்பாளர்களாக தங்களை முன்னிறுத்தினால்தான் அவர்களின் செல்வாக்கு என்னவென்று தெரியும். எனவே இதுவரை யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பு ஸ்டாலினுக்குக் கிடைத்துள்ளது. அதை அவர் பயன்படுத்தும் விதத்தில்தான் 2021 ஆட்சி வாய்ப்பு அவர் கைக்கு வரும்,' என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

English summary
Social media, political critics are giving warm welcome to MK Stalin, the new active president of DMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X