For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆவடியை அலறவிட்ட துப்பாக்கி சத்தம்.. தூங்கி கொண்டிருந்தவரை சுட்டுக் கொன்ற சக வீரர்.. சென்னையில் ஷாக்!

சக வீரர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை ஆவடி பீரங்கி தொழிற்சாலையில், தூங்கி கொண்டிருந்தவரை இன்னொரு வீரர் 7 முறை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டார்!

சென்னையை அடுத்த ஆவடியில் ராணுவ கனரக வாகன தொழிற்சாலை (HVF) இயங்கி வருகிறது.. இங்கு பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

Soldiers clash in avadi tank factory and one died on the spot

இதில் ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த கிரிகேஷ் குமார் என்ற வீரரும் ஒருவர்.. வேலை முடிந்து இவர் ஓய்வறையில் தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு திரிபுராவை சேர்ந்த சக வீரர் நிலம்ப சின்கா என்பவர் வந்தார்.. கையில் இன்சாஸ் துப்பாக்கி வைத்திருந்தார்.. தூங்கி கொண்டிருந்த வீரர் மீது சரமாரியாக 7 ரவுண்ட் சுட்டுவிட்டார்.. இதில், கிரிஜேஷ் குமாரின் வலது கழுத்து, இடது முழங்காலில் குண்டு துளைத்து கொண்டு போய்.. சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உங்கள் உடல் நடுங்குகிறது.. அந்த பயம் பிடிச்சிருக்கு.. ஜாமியா மாணவர்களை விமர்சித்த பாஜக இளம் தலைவர்! உங்கள் உடல் நடுங்குகிறது.. அந்த பயம் பிடிச்சிருக்கு.. ஜாமியா மாணவர்களை விமர்சித்த பாஜக இளம் தலைவர்!

துப்பாக்கி சத்தம் கேட்டு, பாதுகாப்பு அதிகாரி கர்னல் செரியன் அங்கு ஓடினார்.. அங்கு வெறியுடன் நின்று கொண்டிருந்த நிலம்ப சின்காவை, துப்பாக்கியை கீழே வைத்துவிட்டு, சரணடைந்து விடுமாறு உத்தரவிட்டார்.. அதற்குள் மற்ற வீரர்கள் அங்கு ஓடிவந்து நிலம்பசின்காவை தப்பி ஓடாதவாறு சுற்றி வளைத்து பிடித்து கொண்டனர்.. ஆனால் துப்பாக்கி சூட்டிற்கான காரணம் தெரியவில்லை.

Soldiers clash in avadi tank factory and one died on the spot

வீரர்களுக்குள் என்ன தகராறும் தெரியவில்லை.. அதனால், இது குறித்து போலீஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். பாதுகாப்பு பணியில் இருந்த வீரர் கிரிஜேஷ்குமாரை, ஷிப்ட் மாற்றுவதற்காகத்தான் சின்கா ஓய்வறைக்குள் நுழைந்ததாக முதல்கட்டமாக தெரியவந்துள்ளது.. இந்த சம்பவம் ஆவடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Soldiers clash in avadi tank factory and one died on the spot, police inquiry is going on it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X