அடங்காப் பிடாரி குரங்குகள்.. சட்டசபையில் உள்குத்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வேடசந்தூர் அருகே சுற்றித்திரியும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கோரிக்கை விடுத்தார். அப்போது பதிலிட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நம்மில் சிலரும் அடங்காமல் திரிவதாக கூறினார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தொடரின் போது வேடசந்தூரை அடுத்த கூவாக்கப்பட்டியில் அதிகளவு குரங்குகள் சுற்றித்திரிவதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கோரிக்கை விடுத்தார்.

Some of us are carrying recalcitrant : Minister Dindigul Srinivasan

பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் அடங்காப் பிடாரி குரங்குகளை அடக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நம்மில் சிலரும் அடங்காமல் இருப்பதாக கூறினார்.

மேலும் அழகர்கோயிலை சுற்றியுள்ள கிராமங்களில் இடையூறு செய்யும் குரங்குகளை பிடிக்க கூண்டுகள் வைக்கப்படும் என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். அமைச்சர் யாரை குறிப்பிடுகிறார் என்பதை அறிந்ததுபோல் அதிமுக உறுப்பினர்கள் சிரித்ததால் அவையில் சிரிப்பலை உருவானது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Deputy Speaker Pollachi Jayaraman demanded action to capture monkeys near Vedasandur. Some of us are carrying recalcitrant then substituted Minister Dindigul Srinivasan said.
Please Wait while comments are loading...