தி.மு.க மாவட்ட செயலாளருடன் சபாநாயகர் தனபால் திடீர் சந்திப்பு.. ஈரோட்டில் பரபரப்பு
தி.மு.க மாவட்ட செயலாளருடன் சபாநாயகர் தனபால் சந்தித்து பேசினார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

சபாநாயகர் தனபால்-சு.முத்துசாமி சந்திப்பு | வானிலை எச்சரிக்கை- வீடியோ
ஈரோடு: ஈரோடு திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சு.முத்துசாமியை அவரது இல்லத்தில் சபாநாயகர் தனபால் திடீரென சந்தித்து பேசினார். அவருடன் அதிமுக எம்எல்ஏ தென்னரசு மற்றும் அதிமுக நிர்வாகிகளும் உடன் இருத்தனர்.
இந்த தகவல் பரவியதை தொடர்ந்து முத்துசாமியின் வீட்டில் செய்தியாளர்கள் குவிந்தனர். அரை மணி நேரம் நேர சந்திப்பிற்கு பிறகு வெளியே வந்த தனபால் செய்தியாளர்களிடம் பேச மறுத்து விட்டார்.

இரண்டு மாதங்களுக்கு முன் முத்துசாமியின் மனைவி ஜெயலட்சுமி காலமானார். அவரது மறைவிற்கு துக்கம் விசாரிக்கவே வந்ததாக கூறினார்.
முன்னதாக முத்துசாமியின் மனைவி மறைந்த ஜெயலட்சுமி படத்திற்கு சபாநாயகர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தி.மு.க மாவட்ட செயலாளரை சபாநாயர் சந்தித்ததால் ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications