10 படகில் வந்து இலங்கை கடற்படை மிரட்டல்- 5,000 தமிழக மீனவர்கள் கரை திரும்பிய பரிதாபம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை அத்துமீறி மிரட்டியதால் 5,000 தமிழக மீனவர்கள் மீன்பிடி தொழிலைக் கைவிட்டு கரை திரும்பியுள்ளனர்.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல்களுக்கும் அத்துமீறல்களுக்கும் ஒரு முடிவே இல்லை... யாரும் முடிவு கட்டுவதாகவும் இல்லை.

Sri Lanka Navy chases away 5,000 TN fishermen

இந்நிலையில் கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென படையெடுப்பது போல 10-க்கும் மேற்பட்ட ரோந்து படகுகளில் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை சுற்றி வளைத்து மிரட்டியுள்ளனர் இலங்கை கடற்படை.

இதனால் மீன்பிடி தொழிலை அப்படியே கைவிட்டுவிட்டு மீனவர்கள் கரைக்கு திரும்பிவிட்டனர். இதனால் ஒவ்வொரு படகுக்கும் தலா ரூ30,000 முதல் ரூ50,000 வரை பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Over 5,000 Tamil Nadu fishermen were forced to return without their catch after Sri Lankan Navy personnel allegedly intercepted them off Katchatheevu islet.
Please Wait while comments are loading...