அனிதா மரணத்துக்கு காரணமான மத்திய மாநில அரசுகள் தண்டிக்கப்பட வேண்டும்.. ஸ்டாலின் ஆவேசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அனிதா மரணத்துக்கு காரணமான மத்திய மாநில அரசுகள் தண்டிக்கப்பட வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் இன்று அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. திமுக தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் பங்கேற்றுள்ளன.

இந்நிலையில் சென்னை தாம்பரத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மக்களிடையே ஸ்டாலின் கண்டன உரையாற்றினார்.

அரசுகள் தண்டிக்கப்பட வேண்டும்

அரசுகள் தண்டிக்கப்பட வேண்டும்

அப்போது அனிதா மரணத்துக்கு காரணமான மத்திய மாநில அரசுகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். இது நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல என்று கூறிய ஸடாலின் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவே இந்த போராட்டம் நடைபெறுவதாக கூறினார்.

அனிதா கொலை

அனிதா கொலை

அனிதா தற்கொலை செய்து கொண்டாலும் நீட் தேர்வால் நடந்த படுகொலை என அவர் குற்றம்சாட்டினார். நெருக்கடியில் இருந்து தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நீதி கிடைக்க வேண்டும்

நீதி கிடைக்க வேண்டும்

அனிதா மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் அவர் வேண்டுகோள் விடுத்தார். அனிதா மரணத்துக்கு பொறுபேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகியிருக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறினார்.

எப்படி பயிற்சி பெறமுடியும்?

எப்படி பயிற்சி பெறமுடியும்?

3 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி ஏழை எளிய மாணவர்கள் எப்படி நீட் பயிற்சி வகுப்புக்கு செல்ல முடியும் என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். தனது உரையின் போது கவிஞர் பழனிபாரதியின் செத்து செத்து பிறக்குது புதிய இந்தியா கவிதையையும் அவர் வாசித்து காண்பித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Stalin accuses that Anitha death is a murder for the NEET exam. Stalin condemns state and central govt for the NEET exam in the protest.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற