பேரறிவாளனின் பரோல் விவகாரம் என்னாச்சு? சட்டசபையில் எடப்பாடியிடம் கேட்ட ஸ்டாலின்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என சட்டசபையில் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு பிரோல் வழங்கப்படவில்லை.

Stalin asked about Perarivalan parole in TN assembly

பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் உட்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். பேரறிவாளனை பரோலில் விடுவிக்க வேண்டும் என சட்டசபையில் திமுக அண்மையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது.

இந்நிலையில் தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தொடரில் பேரறிவாளனை பரோலில் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படுவதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு போராட்ட விசாரணைக் கமிஷன் அறிக்கை இதுவரை ஏன் தரவில்லை என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Opposition Party leader Stalin asked about Perarivalan parole in TN assembly.The Chief Minister Edappadi Palanisamy responded by saying that the demand for a parole would be considered.
Please Wait while comments are loading...