கடன்களை ரத்து செய்யாமல் தமிழக அரசு விவசாயிகளை வஞ்சிக்கிறது.. ஸ்டாலின் பாய்ச்சல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் வாக்குறுதிப்படி அதிமுக அரசு விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்யவில்லை என்றும், மாநில அரசு விவசாயிகளை ஒட்டு மொத்தமாக வஞ்சித்து வருவதாகவும் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

Stalin blasts TN Govt

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளின் வேதனை குரலுக்கு நியாயம் வழங்க வேண்டும். விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை என்று ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.

தங்கள் உரிமைகளுக்காக தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த 5 நாட்களாக போராடி வருகின்றனர். போராடும் விவசாயிகள் மீது அக்கறை செலுத்த ஆளும் அதிமுக அரசு தயாராக இல்லை என்று குற்றம் சாட்டிய மு.க.ஸ்டாலின், காவிரி நீர் கிடைக்காமல் டெல்டா மாவட்ட விளைநிலங்கள் வறண்டு கிடப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

தேர்தல் வாக்குறுதிப்படி அதிமுக அரசு விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்யவில்லை என்றும், மாநில அரசு விவசாயிகளை ஒட்டு மொத்தமாக வஞ்சித்து வருவதாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசும் தமிழகத்தின் உரிமைகளை தொடர்ந்து புறக்கணிப்பதாக தெரிவித்த ஸ்டாலின், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

விவசாயிகளின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK leader MK Stalin has slammed the TN Govt on its apathy on the status of the farmers.
Please Wait while comments are loading...