முதல்வர் கனவுடன் யார் வேண்டுமானாலும் வரலாம்; முதல்வராக தகுதி ஸ்டாலினுக்கு மட்டுமே உண்டு.. இது வைகோ!
முதல்வர் கனவுடன் யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் முதல்வராகும் தகுதி ஸ்டாலினுக்கு மட்டுமே உண்டு என வைகோ தெரிவித்துள்ளார்.
திருவாரூர்: முதல்வர் கனவுடன் யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் முதல்வராகும் தகுதி ஸ்டாலினுக்கு மட்டுமே உண்டு என வைகோ தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் 95 வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கருணாநிதியின் 95 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருவாரூரில் நேற்று மாலை நடைபெற்றது.
இதில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன், துரைமுருகன், தயாநிதி மாறன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஸ்டாலினுக்கு மட்டுமே தகுதி
கூட்டத்தில் பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஆவேசமாகவும், ஸ்டாலினை முதல்வராக்கியே தீருவேன் என்ற வைராக்கியத்துடனும் பேசினார். அவர் பேசியதாவது,
முதல்வர் கனவுடன் யார் வேண்டுமானாலும் வரலாம்; முதல்வராக ஸ்டாலினுக்கு மட்டுமே தகுதி உண்டு.

பக்கபலமாக இருப்பேன்
நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான அணி 40 இடங்களை கைப்பற்றும். கருணாநிதியை சில நாட்களுக்கு முன் சந்தித்தபோது ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருப்பேன் என்றேன்.

மதிமுக துணை நிற்கும்
அந்த வகையில் திமுகவின் வெற்றிக்காக, ஸ்டாலினை முதல்வராக்க, வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்வேன். எந்த எதிர்பார்ப்புமின்றி ஸ்டாலினுக்கு மதிமுக துணை நிற்கும்.

தூள் தூளாக்கி விட்டது
தமிழக அரசை இயக்குவது மோடி தர்பாரும் ஆர்எஸ்எஸ் யும் தான். தற்போது வந்துள்ள இடைத் தேர்தல் முடிவுகள் பாஜகவின் கனவு கோட்டையை தூள் தூளாக்கி விட்டது. இவ்வாறு வைகோ பேசினார்.

ரஜினி, கமல் மீது சாடல்
நடிகர்கள் ரஜினியும், கமலும் அரசியலில் குதித்துள்ள நிலையில் வைகோவின் இந்த பேச்சு அவர்களை மறைமுகமாக சாடுவதாக கருதப்படுகிறது.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications