முரசொலி பவள விழா.. உதயநிதி உட்பட பலருக்கு நினைவு பரிசு வழங்கினார் ஸ்டாலின்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முரசொலி நிர்வாக மேலாண்மை இயக்குநர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு நினைவு பரிசுகளை ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் முரசொலி பவள விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், முரசொலி செல்வம், இந்து ராம், உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

 Stalin presented memorable awards to the guests in murasoli pavala vizha

நடிகர் கமல்ஹாசன்,கவிஞர் வைரமுத்து,உள்ளிட்டோரும் முரசொலி விழாவில் பேசுகின்றனர். விழாவில் சன்குழும தலைவர் கலாநிதி மாறன், தயாநிதி மாறன், முன்னாள் பொறுப்பாசிரியர் சொர்ணம் உள்ளிட்டோருக்கு ஸ்டாலின் நினைவுப்பரிசு வழங்கினார்.

முரசொலி நிர்வாக மேலாண்மை இயக்குநர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு நினைவு பரிசுகளை ஸ்டாலின் வழங்கினார்.

தமிழச்சி தங்கபாண்டியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். நக்கீரன் கோபால் மற்றும் தினகரன் பத்திரிக்கை செய்தி ஆசிரியர் மனோஜ்குமார் வாழ்த்துரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினி, பிரபு உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Murasoli pavala vizha celebrates in Chennai Kalaivanar audotirium. Stalin presented memorable awards to the guests.
Please Wait while comments are loading...