எம்.ஜி.ஆருக்கு தலைவர் யார் என்றால் கருணாநிதிதான்: ஸ்டாலின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சியில் திமுக தலைவர் கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது நட்பு பாராட்டி வந்ததாக ஸ்டாலின் கூறினார்

சென்னையில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய ஸ்டாலின், முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எம்.ஜி.ஆர், கருணாநிதி ஓர் உதாரணம். எம்ஜிஆர் ஆட்சியில் கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது நட்பு பாராட்டி வந்தனர்.

 stalin talk about MGR and Karunanidhi

பள்ளிகளில் தமிழை கட்டாய மொழியாக்கியவர் கருணாநிதி. மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும். உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க சபதம் ஏற்போம். மத்தியில் ஆட்சி மொழியாகவும், உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாகவும் தமிழை கொண்டுவர வேண்டும்.

தமிழ்நாடு என்று பெயர் பெற்ற பொன்விழாவை கொண்டாடக் கூடிய நேரம் இது. குளங்களை மட்டுமல்லாமல் தமிழகத்தையும் தூர்வாரும் பணியை செய்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
MGR, Karunanidhi is an example of the chief minister, the opposition leader in assemby
Please Wait while comments are loading...