கொளத்தூரில் ஸ்டாலின் வழங்கிய நலத்திட்ட உதவிகள்: பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு நிதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக செயல்தலைவர் ஸ்டாலின், தனது தொகுதியான கொளத்தூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

எதிர்கட்சித்தலைவரான ஸ்டாலின் தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற கொளத்தூர் தொகுதியை மாதம் ஒருமுறை ஆய்வு செய்து மக்களிடம் பேசி குறைகளை கேட்டு வருகிறார்.

நேற்றைய தினம் தனது தொகுதி மக்களை சந்தித்து குறை கேட்டதோடு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாணவிகளுக்கு நிதி உதவி

மாணவிகளுக்கு நிதி உதவி

தமது கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார். 40 கல்லூரி மாணவர்களுக்கு தலா ரூ.5000 வீதம் கல்லூரி உதவித் தொகை வழங்கினார்.

கண் கண்ணாடிகள்

கண் கண்ணாடிகள்

பள்ளி மாணவ,மாணவியர் 61 பேருக்கு தலா ரூ.2000 வீதம் வழங்கினார். கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த 25 பெருக்கு மூக்குக் கண்ணாடிகளும் ஸ்டாலின் வழங்கினார்.

சுத்தப்படுத்தும் லாரி

சுத்தப்படுத்தும் லாரி

தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வாங்கப்பட்ட பாதாளச்சாக்கடை சுத்தப்படுத்தும் லாரியையும் அளித்தார்.

தொகுதியை ஆய்வு செய்தார்

தொகுதியை ஆய்வு செய்தார்

தொகுதியை ஆய்வு செய்த ஸ்டாலின் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்ததோடு, மனுக்களை பெற்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK working president and Leader of the Opposition in Tamil Nadu Assembly, Thalapathy MK Stalin inspected various facilities in his Kolathur constituency and interacted with residents.
Please Wait while comments are loading...