For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி, ஸ்டெர்லைட் விவகாரம்: இடிந்தகரையில் சவப்பெட்டிகளை எரித்து பொதுமக்கள் போராட்டம்

இடிந்தகரையில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Google Oneindia Tamil News

நெல்லை: ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரியும் காவிரி மேலாண்மை அமைக்காததை கண்டித்தும், இடிந்தகரை பொதுமக்கள் சவப்பெட்டிகள் தயார் செய்து தீ வைத்து கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது.

Struggle in Idindhakarai demanding closure of Sterlite plant

அதன்படி நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரியும், கன்னியாகுமரி மாவட்டத்தில் வர்த்தக துறைமுகம் அமைய உள்ளதை கண்டித்தும் போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக சவப்பெட்டி தயார் செய்து தீ வைத்து கொளுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.

English summary
The demonstration was held in Idindhakarai, demanding the closure of the Cauvery Management Board and demanding closure of the Sterlite plant. A large number of civilians participated in this demonstration to prepare and fire the coffin to condemn the central government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X