For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழிசைக்கு நெருக்கடி? வழக்கு தொடரப்படும் என மாணவி சோபியா தரப்பு திட்டவட்டம்!

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் மீது வழக்கு தொடரப்படும் என மாணவி சோபியா தரப்பு தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழிசைக்கு எதிராக வழக்கு தொடுக்க சோபியா தரப்பு உறுதி

    நெல்லை: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் மீது வழக்கு தொடரப்படும் என மாணவி சோபியா தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    துாத்துக்குடியைச் சேர்ந்த 23 வயது ஆராய்ச்சி படிப்பு மாணவி சோபியா. இவர் கடந்த 3ம் தேதி, சென்னையில் இருந்து துாத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார்.

    அதே விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் தூத்துக்குடி சென்றார். அப்போது, அப்போது மாணவி சோபியா பாஸிச பாஜக ஒழிக என விமானத்தில் முழக்கமிட்டார்.

    ஜாமீன்

    ஜாமீன்

    இது தொடர்பாக, தமிழிசை புகாரின்படி, சோபியா கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் தற்போது வெளிவந்துள்ளார்.

    மனித உரிமைகள் ஆணையம்

    மனித உரிமைகள் ஆணையம்

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையத்தில் விளக்கம் அளிக்க சோபியா, அவரது தந்தை மற்றும் வழக்கறிஞர் அதிசய குமார் ஆகியோர் நேற்று நெல்லை வந்தனர்.

    கைதுக்கு பின் நடந்தது

    கைதுக்கு பின் நடந்தது

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சோபியா விமானத்தில் நடந்த சம்பவம் மற்றும் தான் கைது செய்யப்பட்ட பின், நடந்தவை குறித்து விளக்கினார்.

    நடவடிக்கை இல்லை

    நடவடிக்கை இல்லை

    அவரைத் தொடர்ந்து பேசிய சோபியா தரப்பு வழக்கறிஞர் அதிசயகுமார் தமிழிசை அளித்த புகாரில், மாணவி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், மாணவி தரப்பில், தமிழிசை மீது அளித்த புகார் மீது, எந்தவித நடவடிக்கையும் இல்லை.

    வழக்கு தொடர முடிவு

    வழக்கு தொடர முடிவு

    இது குறித்து, ஆணையத்தில் முறையிட்டோம். காவல்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில் தமிழிசை மீது கோர்ட்டில் வழக்கு தொடர்வோம் என அதிசய குமார் திட்டவட்டமாக தெரிவத்தார்.

    English summary
    Student Sophia will file case on Tamilisai in court. Sophiya arrest for sloganeering against bjp in Flight.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X