டிவி சேனல் நேர்காணலில், ரஜினியை தரக்குறைவாக விமர்சனம் செய்த "பொர்க்கி புகழ்" சு.சுவாமி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா நடிகர்களுக்கு படிப்பும், அறிவும் கிடையாது என்றும் ரஜினியை பற்றி தனக்கே உரித்தான வசை சொல்லாலும், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக முறையாக அறிவிப்புகள் வெளியாகவில்லை என்ற போதிலும் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ரஜினி என்ற மிக பெரிய மாஸை தன் பக்கம் இழுக்க பாஜக முயற்சித்தது.

ஆனால் ரஜினியோ அதற்கு பிடிகொடுக்கவில்லை. அவர் தனிக் கட்சி தொடங்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

ரஜினிக்கு கடும் எதிர்ப்பு

ரஜினிக்கு கடும் எதிர்ப்பு

அரசியலுக்கு ரஜினி வருவது குறித்த தகவல்களால் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவோரில் சுப்பிரமணியன் சுவாமியும் ஒருவர். ரஜினிகாந்த் தன் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட ஓரிரு நாள்களில் சு.சுவாமி , ரஜினிக்கென ஒரு கொள்கை கிடையாது. அவர் தமிழர் இல்லை. கர்நாடகாவில் பிறந்த மராத்தியர் அவர். அவர் அரசியலுக்கு வந்தால், கண்டிப்பாக தோல்வியடைவார் என்று டுவிட்டரில் கருத்து வெளியிட்டார்.

கல்வியறிவு இல்லாதவர்

கல்வியறிவு இல்லாதவர்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரஜினியை சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார். அப்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு தகுதியற்றவர். அவர் படிக்காதவர், கொஞ்சமும் கல்வியறிவு இல்லாதவர் என்றெல்லாம் பேசியுள்ளார். மேலும் ரஜினிகாந்த் ஒரு '420' என்று தனது டுவிட்டரில் சுவாமி பதிவிட்டிருந்தார்.

அவன், இவன் என ஒருமையில்...

அவன், இவன் என ஒருமையில்...

இதன் பின்னர், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியன் சுவாமியிடம், ரஜினி அரசியலுக்கு வர நீங்கள் விரும்பவில்லையா என கேட்டதற்கு வரமாட்டார் என்ற சொல்லை, ஒருமையில் பேசினார். இது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மீண்டும் சர்ச்சை

மீண்டும் சர்ச்சை

ரஜினிக்கு எதிராக சு.சுவாமி தொடர்ந்து நாகரீகமற்ற முறையில் கருத்துகளை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று, புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அக்னிப் பரீட்சை என்ற நிகழ்ச்சியில் சு.சுவாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், சினிமா நடிகர்கள் அனைவரும் முட்டாள்கள், படிப்பறிவில்லாதவர்கள் என்றார்.

கொஞ்சமாவது அறிவு

கொஞ்சமாவது அறிவு

இந்த நவீன யுகத்தில் அரசியலுக்கு வருவோருக்கு கொஞ்சமாவது அறிவு வேண்டும். அது சினிமா நடிகர்களுக்கு இல்லை. அதேபோலதான் ரஜினியும். படிப்பறிவில்லாதவர். அவர் என்ன பேசுகிறார், என்ன செய்கிறார் என்பது குறித்து அனைத்தும் எனக்கு தெரியும் என்று ரஜினியை மீண்டும் ஒருமையிலேயே விமர்சித்தார்.

என் தனிப்பட்ட கருத்து

என் தனிப்பட்ட கருத்து

நடிகர் ரஜினிகாந்துக்கு அரசியலுக்கு வர தகுதி உள்ளது, ஆங்கிலத்தில் உரையாடும் திறன் உள்ளது என்று உங்கள் கட்சியை சேர்ந்த ஒருவரே (பொன். ராதாகிருஷ்ணன்) கூறியுள்ளாரே என்று நெறியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு சு.சுவாமியோ, பாஜக என்பது ஜனநாயக கட்சி. இதில் அனைவருக்கும் ஒவ்வொரு அபிப்ராயம் உண்டு. ரஜினி குறித்து என்னுடைய அபிப்ராயத்தை நான் சொன்னேன் என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Subramanian Swmay again critises Rajinikanth and says that no cine actor has knowledge and literacy.
Please Wait while comments are loading...