கிருஸ்துமஸ் கூட்ட நெரிசல்: மங்களூர், ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்கள்
சென்னை: கிருஸ்துமஸ், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பயணிகள் நெரிசலை தவிர்க்க சென்னையில் இருந்து மங்களூருக்கும், செங்கல்பட்டில் இருந்து ராமேஸ்வரத்திற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரலில் இருந்து டிச.24ம் தேதி பகல் 1.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்(06154) மறுநாள் காலை 6.30 மணிக்கு மங்களூர் சென்றடையும். மங்களூரில் இருந்து டிசம்பர்.25ம் தேதி காலை 10.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில்(06155) மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்ட்ரல் வந்துச் சேரும்.

இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு சொரனூர் உட்பட பல்வேறு ரயில்நிலையங்களில் நிற்கும்.
ராமேஸ்வரத்தில் இருந்து டிசம்பர் 25, ஜனவரி1, 8 தேதிகளில் வெள்ளிக்கிழமை பகல் 2.30 மணிக்கு புறப்படும் வாரந்திர சிறப்பு ரயில்(06140) மறுநாள் அதிகாலை 3 மணிக்கு செங்கல்பட்டு போய்ச்சேரும். செங்கல்பட்டில் இருந்து டிசம்பர் 26, ஜனவரி 2, 9 தேதிகளில் சனிக்கிழமை பகல் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்(06141) அதிகாலை 2.15 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். இந்த ரயில் மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மதுரை வழியாகச் செல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications