திங்கள்கிழமை தீர்ப்பா? உச்சநீதிமன்றத்தை உற்றுநோக்கும் செந்தில் பாலாஜி - ரொம்ப முக்கியமான வழக்காச்சே
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் வரும் திங்கள்கிழமை உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், இந்த தீர்ப்பை செந்தில் பாலாஜி மட்டுமின்றி திமுகவினரே எதிர்நோக்கி காத்திருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த அவர், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலை பெற்றுத் தருவதாக கூறி சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜி மீது பதிவு செய்த 3 வழக்குகளும் பல ஆண்டுகளாக எம்பி, எம்.எல்.ஏக்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை இருந்து வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய அரசின் கீழ் செயல்படும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறையின் சம்மனை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது அமலாக்கத்துறை. இந்த வழக்கினை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணமுராரி, சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
கடந்த மார்ச் மாதம் நடந்த இந்த வழக்கின் விசாரணையின் போது, "செந்தில் பாலாஜிக்கு அனுப்பப்பட்ட சம்மனை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது" என்று அமலாக்கத்துறை வழக்கறிஞர் சஞ்சய் ஜெயின் வாதிட்டு இருக்கிறார். செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், அமலாக்கத்துறையின் வாதங்களை எதிர்த்து பல்வேறு தகவல்களை அடுக்கினார்.

இந்த வழக்கின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை வரும் திங்கள்கிழமை உச்சநீதிமன்றம் வெளியிடலாம் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம், இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பினை கொடுத்தால், செந்தில்பாலாஜிக்கு உடனடியாக எந்த சிக்கலும் ஏற்படாது.
இந்த வழக்கு சில மாதங்களுக்கு அடுத்தக்கட்ட மேல்முறையீடு என்று நீண்டுகொண்டே செல்லும். அதேபோல் 2 நீதிபதிகளும், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்துவிட்டால் எந்த சிக்கலும் அவருக்கு வராது. இரண்டு நீதிபதிகளும், அமலாக்கத்துறையின் சம்மனை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தால், செந்தில்பாலாஜிக்கு சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இதில் குறிப்பாக அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு உடனடியாக சம்மன் அனுப்பி விசாரணைக்கு வரவழைப்பதற்கும் வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது. இதன் காரணமாகவே உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை செந்தில் பாலாஜி எதிர்நோக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications