For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் சு. சுவாமி வீடு முற்றுகை- வேல்முருகன் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமியின் சென்னை சாந்தோம் வீட்டை முற்றுகையிட முயன்ற தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தி.வேல்முருகன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Tamil activists protest outside Swamy House

தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என்று நானே இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு ஆலோசனை கூறினேன் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார். அதன் பின்னர் தொடர்ந்து தமிழர் நலன் சார்ந்த பிரச்சனைகளில் துரோக நிலைப்பாட்டையே சு.சுவாமி கடைபிடிக்கிறார்..இதனால் அவர் தமிழகத்தில் நுழைய தடை விதிக்கிறோம் என்று 150 இயக்கங்களின் கூட்டமைப்பாகிய தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.

இதன் பின்னர் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் சுப்பிரமணியன் சுவாமி மீது அடுத்தடுத்து ஐந்து அவதூறு வழக்குகளைப் போட்டது. இதனால் தமிழ்நாட்டுக்கு வராமலேயே டெல்லியில் பதுங்கியிருந்தார் சுப்பிரமணியன் சுவாமி.

தற்போது ஜெயலலிதா பதவி இழந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று தமிழ்நாட்டுக்கு வருவதாக சுப்பிரமணியன் சுவாமி அறிவித்தார். அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னையில் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தி.வேல்முருகன் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் சாந்தோமில் உள்ள சுப்பிரமணியன் சுவாமி வீட்டை முற்றுகையிட சென்றனர்.

அவர்கள் அனைவரையும் கலங்கரை விளக்கம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது சுப்பிரமணியன் சுவாமியின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.

English summary
Tamizhar Vazhvurimai koottamaippu activists protest Outside Subramanyan Swamy Residence in Chennai on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X