3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு டிரான்ஸ்பர்: தேர்தல் ஆணையம் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணி புரியும் அரசு ஊழியர்களை இடமாற்றம் செய்ய தலைமை செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அடுத்தாண்டு தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறும் மாதம், தேதி உள்ளிட்ட எந்த விபரங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், தமிழக கட்சிகள் தற்போதே கூட்டணிக்கான அஸ்திவாரத்தைப் போடத் துவங்கி விட்டன.

இது ஒருபுறம் இருக்க, தமிழக தேர்தல் ஆணையமும் சட்டசபைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கி விட்டது. தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த, தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி உள்ளிட்ட 3 ஆணையர்கள் வருகின்ற ஜனவரி மாத இறுதியில் தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தமிழக சட்டசபைத் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடப்பதை உறுதிசெய்ய, 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது.
வருகின்ற மே 31-ம் தேதியுடன் 3 ஆண்டுகள் பணி முடிப்போரும் இந்த இடமாற்றம் பட்டியலில் சேர்க்கப்படுவர். அதோடு, சொந்த மாவட்டத்தில் பணிபுரியும் அரசு அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல், கல்வி, வருவாய்த் துறையில் பணிபுரிவோரும் இந்த பட்டியலில் இடம்பெறுவர். இது தொடர்பான நடவடிக்கையை எடுக்கும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டு உள்ளார்.
அதோடு, தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள லக்கானி, ஜனவரி 20-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார். இந்த பட்டியல் வெளியான பின்பும் விடுபட்ட வாக்காளர்கள் பெயர் சேர்க்கவும் வாய்ப்பு வழங்கப்படும். இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
வாக்காளர் பட்டியல் வெளியாவதால் 20-ந்தேதி வரை கலெக்டர் சூப்பிரண்டு, டி.ஐ.ஜி., ஆர்.டி.ஓ., தாசில்தார் மற்றும் தேர்தல் பணியில் சம்பந்தப்பட்ட யாரையும் இடமாற்றம் செய்ய முடியாது. அதற்கு தேர்தல் கமிஷனின் அனுமதி பெற வேண்டும். 20-ந்தேதிக்கு பிறகு யாரையும் இடமாற்றம் செய்து கொள்ளலாம். இதுபற்றி தேர்தல் கமிஷனின் உத்தரவை மேற்கொள் காட்டி தலைமை செயலாளர் ஞானதேசிகனுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications