For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடிச்சுச் சாப்பிட மாம்பழம் கிடைக்கலையா… காரணம், எல் நினோவாம்!

Google Oneindia Tamil News

மதுரை: போன வருஷம் போல இந்த சீசன் இல்லையே... மாம்பழமே சரியாக கிடைக்கலையே என்று பலர் வருந்தலாம். இதற்குக் காரணம் எல் நினோ விளைவுதான் என்று கூறுகிறார்கள் நிபுணர்கள்.

தப்பிய பருவ மழை, இதனால் அதிகரித்து விட்ட கடும் வெயில், வறட்சி போன்ற காரணங்களால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாம். இப்படி காரணம் இல்லாமல் வெயில் அதிகரித்துப் போவதால் ஏற்படும் விளைவுதான் எல் நினோ.

மாம்பழ உற்பத்தி வெகுவாக குறைந்து போனதால் இந்த ஆண்டு மாம்பழ வியாபாரம் படுத்து விட்டதாகவும் கூறுகிறார்கள் நிபுணர்கள்.

மதுரையில் இனிக்காத மாம்பழம்

மதுரையில் இனிக்காத மாம்பழம்

மதுரையில் இந்த கோடை காலத்தில் வெறும் 0.2 மில்லி மீட்டர் மழைதான் பெய்துள்ளது.

கடும் வெயிலால் உதிர்ந்த இலைகள்

கடும் வெயிலால் உதிர்ந்த இலைகள்

கடும் வெயில் காரணமாக மாமரங்களில் இலைகள் உதிர்ந்து போய் மாம்பழ உற்பத்தி அடியோடு காலியாகி விட்டதாம்.

11-12ல் பரவாயில்லையே

11-12ல் பரவாயில்லையே

இதுவே மதுரையில் கடந்த 2011ம் ஆண்டு 47 மில்லிமீட்டரும், 2012ல் 76 மில்லி மீட்டர் மழையும் பெய்திருந்தது. ஆனால் 2013ல் மழை மீண்டும் பொய்த்துப் போனது.

பெரிய்ய மார்க்கெட்.. ஆனால் பழம்தான் இல்லை

பெரிய்ய மார்க்கெட்.. ஆனால் பழம்தான் இல்லை

தென் தமிழகத்தின் மிகப் பெரிய பழச் சந்தையில் மதுரையும் ஒன்று. இங்கு ஒவ்வொரு சீசனிலும், 100 முதல் 150 டன் மாம்பழங்கள் விற்பனையாகும்.

20 டன் மட்டும்தான்

20 டன் மட்டும்தான்

ஆனால் இந்த சீசனில் 20 டன் மாம்பழங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளதாம்.

பெல்ட்டிலும் கூட அடிதான்

பெல்ட்டிலும் கூட அடிதான்

திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களை மாம்பழ பெல்ட் என்றே கூறுவார்கள். இங்கும் கூட உற்பத்தி சரிந்துள்ளது.

மேலும் மோசமாகும்

மேலும் மோசமாகும்

தற்போது மாறி வரும் தட்பவெப்ப நிலை, பொய்த்துப் போகும் மழை,, அதிகரிக்கும் வெயில் என எல் நினோ விளைவு காரணமாக மாம்பழ உற்பத்தி வரும் காலங்களில் மேலும் பல பாதிப்புகளைச் சந்திக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

English summary
Do not blame the fruit seller if the mangoes are less juicy this summer. Its the El NIno effect and the poor farmers do not have anything to do with it. With absolutely nothing to bank on to combat the lack of rains, the farmers have been rendered helpless. It is reported that Madurai received just 0.2 mm rains this summer, according to the Skymet Meteorological Division in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X