காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் போராட்டம் தொடரும்.. முத்தரசன் திட்டவட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காவிரி விவகாரத்தில் தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.

Tamil Nadu govt did not take effective action on the Cauvery issue: Mutharasan

காவிரி விவகாரத்தில் தனியாக உண்ணாவிரதம் நடத்தி அதிமுக தன்னை தனிமை படுத்திக்கொண்டது என்றும் முத்தரசன் தெரிவித்தார். தமிழக அரசு நடத்திய அனைத்துக்கட்சி கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பிரதமரை அனைவரும் நேரில் சந்திக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்ப செயல்படுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காவிரி விவகாத்தில் தமிழக அரசுக்கு அனைத்து ஒத்துழைப்பையும் தருகிறோம் என உறுதியளித்தோம். ஆனால் அதிமுக அரசு மத்திய அரசுக்கு ஆதரவாக இருந்து எதிர்க்கட்சிகள் மற்றும் மக்களின் ஆதரவை இழந்துவிட்டார்கள்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்காமலும், எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வராமல் தடுத்ததாகவும் குற்றம்சாட்டினார்.

மோடி அரசு நீடிக்க வேண்டும் என்றே அதிமுக அரசு நினைக்கிறது என்றும் அவர் கூறினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் முத்தரசன் தெரிவித்தார்.

நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் ஆனால் முன்மாதிரியாக நடக்க வேண்டிய மத்திய அரசே உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதித்தால் என்னவாகும் என்றும் முத்தரசக் கேள்வி எழுப்பினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
CPI state secretary Mutharasan accuses Tamil Nadu govt did not take effective action on the Cauvery issue.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற