For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிளஸ் 2 ரிசல்ட் ரிலீஸ் - யாருக்கு என்ன கிரேடு தெரியுமா?

தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்த பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகியுள்ளது. இதில் ரேங்க் முறை ஒழிக்கப்பட்டு கிரேடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் 9 லட்சம் மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு முதன்முறையாக ரேங்க் முறை ஒழிக்கப்பட்டு கிரேடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்வு எழுதிய மாணவர்களில் 92.1 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம்போல் இந்த வருடமும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மொத்தம் 1813 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

Tamil Nadu Plus two result grade announcement

தனியார் மற்றும் அரசு பள்ளிகள் சேர்த்து மொத்தமாக 1813 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், அதில் 292 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த ஆண்டு முதன் முறையாக ரேங்க் முறை ஒழிக்கப்பட்டு ஏ,பி,சி,டி,இ, எப் என கிரேடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1180 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு ஏ கிரேடு அளிக்கப்படுகிறது.
1151 மதிப்பெண்கள் முதல் 1180 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு பி கிரேடு அளிக்கப்படுகிறது.
1126 முதல் 1150 வரை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு சி கிரேடு அளிக்கப்படுகிறது.
1100 முதல் 1126 வரை பெற்றவர்களுக்கு டி கிரேடு அளிக்கப்படுகிறது.
1001 முதல் 1100 வரை பெற்றவர்களுக்கு இ கிரேடு அளிக்கப்படுகிறது.

கிரேடு பெற்றவர்கள் விபரம்

ஏ கிரேடு : 1180 மார்க்குகளுக்கு மேல் பெற்றவர்கள் - 1171

பி கிரேடு : 1151 - 1180 மார்க் பெற்றவர்கள் - 12,283

சி கிரேடு : 1126 - 1150 மார்க் பெற்றவர்கள் - 14,806

டி கிரேடு : 1101 - 1125 மார்க் பெற்றவர்கள் - 17,750

இ கிரேடு : 1001 - 1100 மார்க் பெற்றவர்கள் - 95,906

எப் கிரேடு : 901 - 1000 மார்க் பெற்றவர்கள் - 1,36,849

ஜி கிரேடு : 801 - 900 மார்க் பெற்றவர்கள் - 1,64,489

எச் கிரேடு : 701 - 800 மார்க் பெற்றவர்கள் - 1,69,070

ஐ கிரேடு : 700 மற்றும் அதற்கு கீழ் பெற்றவர்கள் - 2,80,938

English summary
Tamil Nadu Plus Two (+2) Result 2017 The Tamil Nadu Board announced the HSC results on its official website. A,B,C,D, E, F grade introduce in TamilNadu exam result.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X