For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லஞ்சம்: கம்பெனிகள் பதிவாளர் மனுநீதிச் சோழன் கைது! தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி மீது வழக்கு!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: லஞ்சம் பெற்றதாக கம்பெனிகள் பதிவாளர் மனுநீதிச் சோழனை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். மனுநீதி சோழனுக்கு லஞ்சம் கொடுத்ததாக செட்டிநாடு குழுமத்தின் தலைவர் பிரபல தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் கம்பெனிகள் பதிவுத் துறையின் பதிவாளராக இருப்பவர் மனுநீதிச் சோழன். பிரபல தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமியை அனைத்து செட்டிநாடு நிறுவனங்களில் இருந்தும் நீக்குவது என அவரது நிறுவனங்களின் ஆண்டு பொதுக்குழுக் கூட்ட உறுப்பினர்கள் கூடி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

Tamil Nadu registrar of companies arrested for taking bribe

தமக்கு எதிரான இந்த பொதுக்குழுக் கூட்ட முடிவுகள் அனைத்துமே செல்லாது என்று சட்டப்பூர்வமாக அறிவிப்பதற்காக எம்.ஏ.எம். ராமசாமி, கம்பெனிகள் பதிவாளர் மனுநீதிச் சோழனை அணுகியுள்ளார். இதனைத் தொடர்ந்து எம்.ஏ.எம். ராமசாமி கேட்டுக் கொண்டதன் பேரில் பொதுக்குழு முடிவுகளை செல்லாது என்று அறிவிப்பதற்காக ரூ10 லட்சத்தை லஞ்சமாக பெற்றிருக்கிறார் மனுநீதிச் சோழன்.

மனுநீதிச் சோழன் லஞ்சம் வாங்க இருக்கிறார் என்ற தகவல் சிபிஐ அதிகாரிகளுக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் எம்.ஏ.எம். ராமசாமியிடம் மனுநீதிச் சோழன் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக சிபிஐ அதிகாரிகளிடம் பிடிபட்டார்.

லஞ்சம் பெற்றதற்காக மனுநீதிச் சோழனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் லஞ்சம் கொடுத்ததாக செட்டிநாடு குழுமங்களின் தலைவர் எம்.ஏ.எம். ராமசாமி மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக எம்.ஏ.எம். ராமசாமியும் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் அவரது செட்டிநாடு அரண்மனைக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்திய பின்னர் வழக்கு மட்டும் பதிவு செய்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர்.

தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி முன்னாள் ராஜ்யசபா எம்.பி. கர்நாடகா மாநிலத்தில் இருந்து மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் எம்.பியானவர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவும் இருந்து வருகிறார்.

அண்மையில் தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக போலீசில் புகார் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Anti-Corruption Bureau (ACB) of the Central Bureau of Investigation (CBI) on Tuesday arrested Manuneethi Cholan, registrar of companies, Tamil Nadu, on charges of taking a bribe of Rs 10 lakh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X