பத்தாம் வகுப்பு ரிசல்ட்- வழக்கம் போல மாணவிகளே அதிகம் 96.2% பேர் தேர்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வில் 94.4% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர் . வழக்கம் போல மாணவிகளே அதிக அளவில் 96.2% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 தேர்வுக்கு அறிவித்தது போலவே பத்தாம் வகுப்பு தேர்விலும், மாநில, மாவட்ட அளவிலான முதல் 3 இடங்கள் இடம்பெறாது. தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றை இணைய தளத்தில் பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tamil Nadu SSLC 10th class results - 96.2% girls passed

10 லட்சம் மாணவ, மாணவியருக்கு உடனடியாக அவர்களின் செல்போனுக்கு முடிவு அனுப்பி வைக்கப்பட்டன. முதன்முறையாக ரேங்க் முறையில்லாமல் கிரேடு முறையில் ரிசல்ட் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு 92.5 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 96.2 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகம்.

481 மதிப்பெண்களுக்கு மேல் 38611 பேர் பெற்றுள்ளனர். 450 முதல் 480 வரை 1,22,757 பேர் பெற்றுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Girls have come good this time too in 10th class results. 96.2% girls have passed out in this year. 92.5% boys have passed the exams.
Please Wait while comments are loading...