For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக 15-21, திமுக 10-16, பாஜக அணி 6-10 தொகுதிகளில் வெல்லும்: சி.என்.என்.- ஐ.பி.என். சர்வே

By Mathi
|

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அதிமுக அணி 15 முதல் 21 தொகுதிகளிலும் திமுக அணி 10 முதல் 16 தொகுதிகளிலும் பாஜக அணி 6 முதல் 10 இடங்களிலும் வெல்லும் என்று சி.என்.என்.-ஐ.பி.என்.- லோக்நிதி- தி வீக் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் இன்று நடைபெற்றால் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று சி.என்.என்.-ஐ.பி.என்.- லோக்நிதி- தி வீக் இணைந்து கருத்து கணிப்பு நடத்தியது. இதில் தேசிய அளவில் பாஜக அணி 233 தொகுதிகளைக் கைப்பற்றும் எனத் தெரிவித்திருந்தது.

அத்துடன் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பீகாரில் பாரதிய ஜனதா, ஒடிஷாவில் பிஜூ ஜனதா தளம் அதிக இடங்களை வெல்லும் என்றும் இக்கருத்து கணிப்பு கூறியது. தற்போது தமிழக தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்ற கருத்து கணிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுக அணி

அதிமுக அணி

லோக்சபா தேர்தலில் அதிமுக அணிக்கு 15 முதல் 21 தொகுதிகள் கிடைக்குமாம். கடந்த 2009ஆம் ஆண்டு அதிமுக அணி 22.9% வாக்குகளைப் பெற்றிருந்தது. இது தற்போது 32% ஆக அதிகரித்துள்ளதாம்.

திமுக அணிக்கு சரிவு

திமுக அணிக்கு சரிவு

ஆனால் திமுக அணி 10 முதல் 16 தொகுதிகள் வரைதான் கைப்பற்றுமாம். அதேபோல் கடந்த தேர்தலில் 27.9% வாக்குகளைப் பெற்றிருந்த இந்த அணியின் வாக்கு சதவீதம் 23%ஆக குறைந்துள்ளதாம்.

பாஜக அணிக்கு 6-10 இடங்கள்

பாஜக அணிக்கு 6-10 இடங்கள்

பாரதிய ஜனதா தலைமையிலான அணிக்கு 6 முதல் 10 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறதாம். பாஜக தலைமையிலான அணிக்கு (தேமுதிக, பாமக, மதிமுகவின் ஓட்டு வங்கியைக் கூட்டினால்) 2009 தேர்தலில் 21.8% வாக்கு இருந்தது. இது தற்போதும் 22%ஆகத்தான் உயர்ந்து இருக்கிறதாம். மோடி அலையால் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு மட்டுமே 17 சதவீதம் வரை அதிகரித்துவிட்டதாகக் கூறப்படுவது உண்மையில்லை என்பதை இந்தக் கருத்துக் கணிப்பு சுட்டிக் காட்டுகிறது.

காங்கிரஸுக்கு முட்டை

காங்கிரஸுக்கு முட்டை

காங்கிரஸ் கட்சிக்கு இத்தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்க வாய்ப்பில்லையாம். அது கடந்த தேர்தலில் 15.9% வாக்குகளைப் பெற்றிருந்தது. இம்முறை இது 12%ஆக குறையுமாம்.

ஆம் ஆத்மிக்கு 2%

ஆம் ஆத்மிக்கு 2%

ஆம் ஆத்மி கட்சி எந்த தொகுதியிலும் வெல்லாது என்ற போதும் 2% வாக்குகள் கிடைக்குமாம்.

வட தமிழகத்தில்...

வட தமிழகத்தில்...

வட தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிமுக, திமுக அணி, பாஜக அணி ஆகிய மூன்றுக்கும் இடையேதான் கடும் போட்டி இருக்குமாம். இங்கு காங்கிரஸ் போட்டியிலேயே சுத்தமாக இல்லை.

காவிரி டெல்டாவில்..

காவிரி டெல்டாவில்..

காவிரி டெல்டா மாவட்டங்களில் அதிமுகவே முன்னணி வகிக்குமாம். 2வது இடம் திமுகவுக்குதான்.

மேற்கு மாவட்டங்களில்..

மேற்கு மாவட்டங்களில்..

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் எனப்படும் கொங்கு 'பெல்ட்டில்' அதிமுக முன்னணியில் இருக்கிறதாம். காங்கிரஸும் ஓரளவு சொல்லிக் கொள்ளும்படியான வாக்குகளைப் பெறுமாம்.

தென் மாவட்டங்களில்..

தென் மாவட்டங்களில்..

தென் மாவட்டங்களில் அதிமுக, திமுக அணி, பாஜக அணிகள் இடையே கடும் போட்டி இருக்குமாம். இங்கும் காங்கிரஸ் வாக்குகள் பெருமளவில் சரிந்துள்ளன.

அதிமுகவுக்கு பெண்கள் ஆதரவு

அதிமுகவுக்கு பெண்கள் ஆதரவு

தமிழகத்தில் ஆண்களில் 26% அதிமுகவையும் 21% பேர் திமுகவையும் ஆதரிக்கின்றனராம். பெண்களில் 39% பேர் அதிமுகவையும் திமுகவை 25% பேரும் ஆதரிக்கிறார்களாம்.

பாஜகவுக்கு 27% ஆண்கள் ஆதரவாம்

பாஜகவுக்கு 27% ஆண்கள் ஆதரவாம்

அதே நேரத்தில் ஆண்களில் 27% பேர் பாஜகவையும் 14% காங்கிரஸையும் ஆதரிக்கிறார்களாம். பெண்களில் 16% பாஜகவையும் 10% பேர் காங்கிரஸையும் ஆதரிக்கின்றனராம்.

பாஜக அணிக்கு இளைஞர்கள் ஆதரவு

பாஜக அணிக்கு இளைஞர்கள் ஆதரவு

18 முதல் 25 வயதிலான இளைஞர்களில் 31% பாஜக அணியையும் 18% அதிமுகவையும் ஆதரிக்கின்றனராம். 26-35 வயதுடையோரில் 29% அதிமுகவையும் 28% அணியையும் ஆதரிக்கின்றனராம்.

அதிமுகவுக்கு முதியோர் ஆதரவு

அதிமுகவுக்கு முதியோர் ஆதரவு

36 முதல் 45 வயதுடையோரில் 36% அதிமுகவையும் 18% பேர் மட்டும் பாஜகஅ ணியையும் ஆதரிக்கிறார்களாம். மேலும் 46 வயதுக்கு அதிகமானோரில் 36% அதிமுகவையும் 18% பேர் பாஜக அணியையும் ஆதரிக்கிறார்கள் என்கிறது கருத்து கணிப்பு.

English summary
The ruling AIADMK led by Chief Minister J Jayalalithaa continues her lead in Tamil Nadu. According to CNN-IBN-CSDS-Lokniti-The Week national election tracker the AIADMK is projected to win 15-21 seats in the Lok Sabha elections according to the projections by Chennai Mathematical Institute Director Rajeeva Karandikar. The main rival DMK is expected to get 10-16 seats and the BJP-MDMK alliance is likely to get 6-10 seats in the elections. The isolated Congress is not expected to open its account in this election in the state with 39 seats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X